Home
Gadgets

இப்படி ஒரு இயர்போன் மாடலா? கெத்து காட்டிய Philips.! இதில் என்ன சிறப்பு தெரியுமா?

மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் தொடர்ந்து புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பிரபலமான பிலிப்ஸ் நிறுவனம் தனித்துவமான இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இயர்போன் மாடலுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அதாவது பிலிப்ஸ் நிறுவனம் என்7808 எனும் இயர்போன் மாடலை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள சென்சார்கள் பயனர்களின் உறங்கும் விதத்தை டிராக் செய்து பயனர் உறங்கினால், தானாக ஆஃப் ஆகிவிடும் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பிலிப்ஸ் நிறுவனம்.

இப்படி ஒரு  இயர்போன் மாடலா? கெத்து காட்டிய Philips.!

ஸ்லீப் ஆய்வாளர் கோகூன்
இந்த புதிய வகை ஸ்லீப் இயர்போன் ஆனது டிபி விஷன் மற்றும் ஸ்லீப் ஆய்வாளர் கோகூன் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயர்போனின் முக்கிய அம்சம் என்னவென்றால், இதைப் பயன்படுத்துவோர் அப்படியே உறங்கும் பட்சத்தில் ஆடியோ சத்தம் மெல்ல மெல்ல குறைந்து, தானாக ஆஃப் ஆகி விடும்.

குறிப்பாக இந்த பிலிப்ஸ் என்7808 இயர்போன் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேனசலேஷன் வசதி கிடையாது. ஆனால் இது ஸ்மார்ட் வைட் நாய்ஸ் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இந்த வைட் நாய்ஸ் வசதியானது உறக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வெளிப்புற சத்தத்தைக் குறைக்கச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு  இயர்போன் மாடலா? கெத்து காட்டிய Philips.!

தனித்துவமான டிசைன்
இந்த பிலிப்ஸ் என்7808 இயர்போன் ஆடியோ அவுட்புட் ஆனது பயனர் உறங்கியதும் தானாக அட்ஜஸ்ட் ஆகிக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த புதிய இயர்போனில் உள்ள மெல்லிய ஹவுசிங் இரவில் எவ்வித இடையூறும் இல்லாமல் சவுகரியமாக அணிந்து கொள்ள உதவுகிறது.

அதேபோல் பிலிப்ஸ் என்7808 இயர்போன் டிசைன் மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம். பின்பு இதன் ஆர்மேச்சர் டிரைவர்கள் இயர்போனை 6எம்எம் அளவில் இருக்கச் செய்துள்ளது. பின்பு பயனர்களுக்கு சிறப்பான உறக்கத்தைக் கொடுக்கும் வகையில் இந்த இயர்போன் கோகூன் என்ற ஆப் மூலம் இணைந்து வேலை செய்யுமாம்.

இப்படி ஒரு  இயர்போன் மாடலா? கெத்து காட்டிய Philips.!

பேட்டரி எப்படி?
பிலிப்ஸ் நிறுவனம் என்7808 மாடலில் அக்செலோமீட்டர்கள் மற்றும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மாணிட்டர் உள்ளது. குறிப்பாக இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். பின்பு பிலிப்ஸ் என்7808 இயர்போன் மாடலை முழு சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

என்ன விலை?
தற்போது அறிமுக சலுகையாக பிலிப்ஸ் என்7808 ஸ்லீப் இயர்போன் விலை 1,181 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ14,312) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகைக்குப் பின்பு இந்த இயர்போனின் விலை 1681 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,492) என மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சில நாடுகளில் மட்டுமே இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த இயர்போன் மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு  இயர்போன் மாடலா? கெத்து காட்டிய Philips.!

அதேபோல் ஒன்பிளஸ், ஆப்பிள், சியோமி போன்ற நிறுவனங்களும் தனித்துவமான இயர்போன்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் விரைவில் தங்களது புதிய இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்யும். அதேபோல் இப்போது வெளிவந்துள்ளது பிலிப்ஸ் நிறுவனத்தின் இயர்போன் மாடலுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு இருக்கும்.

Image source: Phillips

Best Mobiles in India

English summary
Philips N7808 Sleep Earphones Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X