Home
Gadgets

Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது! விலை மற்றும் விபரம்!

பிலிப்ஸ் நிறுவனம் புதிதாக நான்கு ஆடியோ சாதனங்களை இந்திய சந்தையில் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்களில் ஒரு ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனமும், ஒரு வயர்லெஸ் நெக்பேண்ட் சாதனமும், ஒரு வயர்லெஸ் சவுண்ட்பார் மற்றும் சவுண்ட்பார் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகை

அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகை

இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகையின் போது துவங்குகிறது. அமேசானில் பிரைம் டே சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் துவங்குகிறது. பிலிப்ஸ் நிறுவனத்தின் பிலிப்ஸ் TAT4205BK ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், TAN2215BK வயர்லெஸ் நெக்பேண்ட், HTL4080 வயர்லெஸ் சவுண்ட்பார் மற்றும் HTL1045 சவுண்ட்பார் உள்ளிட்டவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 TAT4205BK ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

TAT4205BK ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

இதில் TAT4205BK ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் மைலர்(Mylar) மெட்டீரியல் டிரைவர்களுடன் அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றது. இதில் மென்மையான ரப்பரைஸ்டு விங் டிப் ஐடியாவுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் IPX5 சான்று மற்றும் 20 மணி நேர பிளே பேக் டைம் பேட்டரி பேக்கப் உடன் வருகிறது.

HTL1045 சவுண்ட்பார்

HTL1045 சவுண்ட்பார்

புதிய பிலிப்ஸ் TAN2215BK வயர்லெஸ் நெக்பேண்ட் 9mm டிரைவருடன், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் சான்றிதழுடன் வருகிறது. இந்த நெக்பேண்ட் சாதனம் 11 மணி நேர பேட்டரி பேக்கப் உடன் வருகிறது. HTL1045 சவுண்ட்பார் மாடலில் HDMI ARC உடன் கூட 4K ஆடியோ, ப்ளூடூத், ஆப்டிக்கல் ஆடியோ மற்றும் யுஎஸ்பி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிலிப்ஸ்

இந்திய சந்தையில் புதிய பிலிப்ஸ் TAT4205BK ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் வெறும் ரூ. 6,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், TAN2215BK வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல் வெறும் ரூ. 3,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் HTL4080 வயர்லெஸ் சவுண்ட்பார் சாதனம் வெறும் ரூ. 16,990 என்று விலையிலும் HTL1045 சவுண்ட்பார் மாடல் வெறும் ரூ. 9,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Philips launches new true wireless earbuds, neckband headset, soundbars in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X