நீண்ட நாட்களுக்கு பிறகு 7 ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த பிலிப்ஸ்.!
சியோமி ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெற்றுள்ள மைக்ரோ டிம்மிங் மென்பொருள் தொழில்நுட்பம், இந்த பிலிப்ஸ் டிவி மாடல்களிலும் இடம்பெற்றுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பிலிப்ஸ நிறுவனம் இந்திய சந்தையில் 22-முதல் 65-இன்ச்-வரை 7 ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதில் சில டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி மாடல்களில் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, பிலிப்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த 7 மாடல்களில் 65-இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த எல்இடி டிவிக்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்-ஸ்கீரின்
மேலும் பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவிகளின் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கீரின் நிறங்கள் சுவரில் அருமையாக பிரதிபலிக்கச் செய்கிறது, பின்பு
இதனுடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் அறையில் சிறந்த விர்ச்சுவல் சவுன்ட் மற்றும் மின்விளக்குகளை மிளரச் செய்கிறது.

தெளிவான காட்சி
குறிப்பாக பிலிப்ஸ் டிவி மாடல்கள் தெளிவான காட்சியை கொடுக்கும் விதமாக சிறந்த தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது,
மேலும் பிலிப்ஸ் 4கே டிவிக்கள் (6100/ 6700 சீரிஸ்) ஹெச்.டி.ஆர். பிளஸ் SAPHIவழங்கப்பட்டு இருப்பதால் டி.வி. மற்றும் தரவுகளை
மிக எளிமையாக இயக்க வழிவகை செய்கிறது.

மைக்ரோ டிம்மிங்
பின்பு சியோமி ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெற்றுள்ள மைக்ரோ டிம்மிங் மென்பொருள் தொழில்நுட்பம், இந்த பிலிப்ஸ் டிவி மாடல்களிலும்
இடம்பெற்றுள்ளது, இந்த தொழில்நுட்பம் வீடியோவை 6400 வெவ்வேறு சூழல்களில் கண்டறிந்து, அதற்கு ஏற்ப தரத்தை
மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.

டி.டி.எஸ். ஹெச்.டி.
பிலிப்ஸ் டிவி சாதனங்களில் டி.டி.எஸ். ஹெச்.டி. (DTS HD) தொழில்நுட்பம் ஆதரவு கொண்pடுள்ளது, எனவே சிறந்த தியேட்டர் அனுபவமும் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:
22-இன்ச் முழு எச்டி எல்இடி கொண்ட பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.9,990-ஆக உள்ளது.
65-இன்ச் முழு எச்டி எல்இடி கொண்ட பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.1,49,990-ஆக உள்ளது.
இதே போன்று மற்ற ஸ்மார்ட் டிவிகளும் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications