Home
Gadgets

மொத்தமாக முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. கூகுள் டிவி OS.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் PHILIPS டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிலிப்ஸ் (PHILIPS) 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி டால்பி ஆடியோ, 24W ஸ்பீக்கர்கள், தரமான பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிலிப்ஸ் பிரேம்லெஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (PHILIPS Frameless 43 inch Smart Google TV 2025) மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மொத்தமாக முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் PHILIPS டிவி..

பிலிப்ஸ் பிரேம்லெஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (PHILIPS Frameless 43 inch Smart Google TV 2025 Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிகசல்ஸ், எச்டிஆர் 10, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

A55 பிராசஸர் உடன் இந்த பிலிப்ஸ் பிரேம்லெஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் வசதியும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த பிலிப்ஸ் பிரேம்லெஸ் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

குரோம்காஸ்ட் ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஒரு ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளது. குறிப்பாக பிரேம்லெஸ் டிசைன் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியும் இந்த பிலிப்ஸ் பிரேம்லெஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

வைஃபை, ப்ளுடூத், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்,3.5எம்எம் ஆடியோ ஜாக், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த பிலிப்ஸ் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
PHILIPS Frameless 43 inch Smart Google TV 2025 price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X