பேரு Philips நியாபகம் இருக்கா?- இனி தியேட்டரே வீட்டில், ஜொலிக்கும் லைட் உடன் அல்ட்ரா HD டிவி!

|

பிளாக் அண்ட் வைட் டிவிகளை முறியடித்து கலர் டிவிகள் ஒவ்வொரு வீடுகளையும் ஆக்கிரமித்தது. வல்லவனுக்கு வல்லவன் வரத்தான் செய்வான் என்ற கூற்றுக்கு ஏற்ப கலர் டிவியை ஓரம் கட்டி ஒவ்வொரு வீடுகளையும் ஸ்மார்ட் டிவி ஆக்கிரமித்து வருகிறது. கலர் டிவி என்று அறிமுகமான காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கோலோச்சி நின்ற நிறுவனம் Philips. இது அனைவரும் அறிந்ததே.

புது ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்த பிலிப்ஸ்

புது ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்த பிலிப்ஸ்

ஸ்மார்ட்டிவிகளை பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்களோடு வெவ்வேறு விலைப் பிரிவில் அறிமுகம் செய்து வருகிறது.

இந்த ஸ்மார்ட்டிவித் துறையிலும் காலடி பதித்த பிலிப்ஸ் நிறுவனம், குறிப்பிட்ட அளவிலான ஸ்மார்ட்டிவிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் கடந்த கால வளர்ச்சியும் வரவேற்பும் தற்போது இல்லை.

இதை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஒரு புது ஸ்மார்ட்டிவியை பிலிப்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது.

பிரத்யேக ஆம்பிலைட் அம்சம்

பிரத்யேக ஆம்பிலைட் அம்சம்

Philips நிறுவனம் இந்தியாவில் பிலிப்ஸ் 7900 ஆம்பிலைட் அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது. டிவியின் பிரத்யேக அம்சமாக இதன் மூன்று பக்கத்திலும் ஆம்பிலைட் சிஸ்டம் இருக்கிறது.

டிஸ்ப்ளேயில் காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் போது திரையின் விளிம்புகளின் பின்புறத்தை சுற்றி லைட்கள் ஒளிரும். இந்த லைட்களானது திரையில் காட்டப்படும் தகவல் மற்றும் வண்ணங்களின் தன்மைக்கு ஏற்ப ஒளிரும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

புதிய டிவியின் ஆரம்ப விலை என்ன?

புதிய டிவியின் ஆரம்ப விலை என்ன?

Philips நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பிலிப்ஸ் 7900 ஆம்பிலைட் அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவியானது உச்சப்பட்ச விலையில் இருக்கிறது. ஆம், இந்த டிவியின் விலை ரூ.99,990 ஆகும். மேலும் இதுதான் இந்த மாடல் டிவியின் ஆரம்ப விலை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு விலையில் ஸ்மார்ட்டிவியா?

இவ்வளவு விலையில் ஸ்மார்ட்டிவியா?

இவ்வளவு விலையில் டிவி அறிமுகம் செய்தால் வரவேற்பு கிடைக்குமா என்றால், வளர்ந்து வரும் ஸ்மார்ட்டிவி சந்தையை பொறுத்த வரை இது மிகக் குறைவான விலை தான்.

ஆம் சோனி ரூ.5 லட்சம், ரூ.6 லட்சம் என ஸ்மார்ட்டிவிகளை லட்சங்களில் அறிமுகம் செய்து வருகிறது. இதையெல்லாம் விட எல்ஜி நிறுவனம் ரூ.75 லட்சம் மதிப்பிலான ரோலபிள் ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்திருக்கிறது.

இப்போது புரிந்திருக்கும் இது ஒரு விலையே இல்லை என்று குறிப்பிடுவதற்கான காரணம்.

வண்ணங்களுக்கு ஏற்ப ஒளிரும் லைட்

வண்ணங்களுக்கு ஏற்ப ஒளிரும் லைட்

பிலிப்ஸ் ஸ்மார்ட்டிவி ஆனது மூன்று அளவுகளில் வெளியாகி இருக்கிறது. அது 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஆகும்.

இந்த அனைத்து அளவு ஸ்மார்ட்டிவிகளும் அல்ட்ரா-HD (3840 x 2160) LED பேனல்கள், டால்பி அட்மாஸ், HDR மற்றும் டால்பி விஷன் ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இந்த அனைத்து டிவிகளும் ஆம்பிலைட் ஆதரவுகளை கொண்டிருக்கிறது. இந்த டிவியின் மூன்று பக்கத்திலும் LED லைட்கள் இருக்கிறது. இது தனித்துவமான பார்வை அனுபவம் வழங்குவதை உறுதி செய்கிறது.

திரையில் காட்டப்படும் வண்ணங்களுக்கு ஏற்ப இது ஒளிருகிறது. பிற அம்சங்கள் குறித்த விவரங்களை சற்று ஆராயலாம்.

Philips Ultra-HD LED TV சிறப்பம்சங்கள்

Philips Ultra-HD LED TV சிறப்பம்சங்கள்

Philips 7900 Ambilight Ultra-HD LED Android TV அம்சங்கள் குறித்து பார்க்கலாம். முன்னதாகவே குறிப்பிட்டது போல் மூன்று பக்க ஆம்பிலைட் இதன் தனித்துவ அம்சமாக இருக்கிறது.

இந்த லைட் ஒளிரும் போது டிவியில் காட்டப்படும் காட்சிகளை துல்லியமாக காண்பதற்கு ஏதும் அசௌகரிய நிலை ஏற்படுமா என்ற கேள்வி வரலாம். இந்த அனைத்து ஆம்பிலைட்களும் விளிம்புகளின் பின்புறத்தை நோக்கி ஒளிருகிறது. மேலும் காட்சியின் தன்மைக்கு ஏற்ற ஒளிரும் காரணத்தால் டிஸ்ப்ளேவின் காட்சிக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வித்தியாசமான காட்சி அனுபவத்தை பெறலாம்.

தேவைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யலாம்

தேவைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யலாம்

அதுமட்டுமில்லை இந்த ஆம்பிலைட்களை டிவியின் ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி அட்ஜஸ்ட் செய்யலாம். தேவைக்கேற்ற தன்மையுடன் ஒளிரச் செய்யலாம். மேலும் இது தேவையில்லை என்று எண்ணும் பட்சத்தில் அதை அணைத்தும் கொள்ளலாம்.

உயர்தர பார்வை அனுபவம் உறுதி

உயர்தர பார்வை அனுபவம் உறுதி

பிலிப்ஸ் 7900 ஆம்பிலைட் LED டிவிகளானது டால்பி விஷன், HDR10+, HDR10 மற்றும் HLG உட்பட உயர்தர அம்சங்களை கொண்டிருக்கிறது. உயர் டைனமிக் ரேன்ஜ் மீடியாத்தர

அனுபவத்தை இந்த ஸ்மார்ட்டிவி வழங்குகிறது. டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவோடு வைஃபை, ப்ளூடூத் 5, எச்டிஎம்ஐ போர்ட் என பல இணைப்பு விருப்பங்களைக் கொண்டிருக்கிறது.

புதிய பிலிப்ஸ் டிவியின் விலை

புதிய பிலிப்ஸ் டிவியின் விலை

Philips 7900 Ambilight Ultra-HD LED Android TV இன் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். முன்னதாகவே குறிப்பிட்டது போல் இந்த ஸ்மார்ட்டிவி மூன்று அளவு விருப்பங்களில் கிடைக்கிறது.

இதன் 55 இன்ச் ஸ்மார்ட்டிவியின் விலையானது ரூ.99,990 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 65 இன்ச் ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.1,49,990 எனவும் 75 இன்ச் ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.1,89,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

விற்பனையில் கிடைக்கும் மற்றொரு ஸ்மார்ட் டிவி

விற்பனையில் கிடைக்கும் மற்றொரு ஸ்மார்ட் டிவி

முன்னதாக அறிமுகமான மற்றொரு மாடல் பிலிப்ஸ் டிவி அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. 43 இன்ச் அளவுடன் கூடிய முழு எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியானது ரூ.44,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.26,999 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியும் பல்வேறு மேம்பட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது. 1080 பிக்சல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளே, 16 வாட்ஸ் ஆடியோ அவுட்புட், ஆண்ட்ராய்டு 9.0 பை உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், ஜீ5 என பல்வேறு ஸ்ட்ரீமிங் தள உள்ளமைவுகளைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Philips 7900 Ambilight Ultra-HD Android LED TV Series Launched With Edges Screen Light

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X