Home
Gadgets

பழைய TV போச்சு.. 65 இன்ச் டிவிக்கு 20 சதவீத ஆபர்.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

பிலிப்ஸ் நிறுவனத்தின் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றன. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக பிலிப்ஸ் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்கின்றன. இதில் 65 இன்ச் பிலிப்ஸ் கியூஎல்டி டிவி 20 சதவீத டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் பிலிப்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு (PHILIPS 65 inch QLED TV) 20 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.43,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

பழைய TV போச்சு.. 65 இன்ச் டிவிக்கு 20 சதவீத ஆபர்.. QLED டிஸ்பிளே!

பிலிப்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (PHILIPS 65 inch QLED TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த பிலிப்ஸ் டிவி கொண்டுள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெட் கொடுக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொண்டுள்ளது.

மேலும், வைடு கலர் காமட் (Wider Color Gamut), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) கொடுக்கப்பட்டுள்ளது. 4K 120 Hz ஹை ஸ்பீடு ரெஃப்ரெஷ் (High Speed Refresh) கிடைக்கிறது. ஐ கேர் (Eye Care) மற்றும் எம்இஎம்சி (MEMC) கொண்டுள்ளது. மேலும், எச்எல்ஜி (HLG) கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் அல்ட்ரா நேரவ் பெசல் டிசைன் (Ultra-narrow Bezel Design) வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ற சவுண்ட் அவுட்புட் கொடுக்க சினிமாடிக் ஆடியோ (Cinematic Audio) கிடைக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட 30W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. 2.0 சேனல் ஸ்பீக்கர்கள் (2.0 Channel Speakers) உள்ளன. மேலும், சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) இந்த பிலிப்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட ஏ55 சிப்செட் (A55 Chipset) கிடைத்துள்ளது. மேலும், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. கூகுள் ஓஎஸ் கிடைப்பதால், இன்-பில்ட் குரோம்காஸ்ட் (In-built Chromecast) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) கிடைத்துள்ளது. மேலும், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) கொண்டுள்ளது.

பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற ஓடிடி ஆப்களும் வருகிறது. மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த பிலிப்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் உள்ளன.

மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஏவி போர்ட் (AV Port), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) போர்ட் மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது. இந்த பிலிப்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவியானது 65PQT8100/94 மாடலாகும். அதேபோல 2025 எடிஷனாகும். 1 வருட வாரண்டி மற்றும் பிளாக் கலரில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
PHILIPS 65 inch QLED Ultra HD 4K TV 2025 Edition Price Drop on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X