எல்லா பழைய TV-க்கும் குட்பை.. 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச்.. 3 PHILIPS டிவிகள் மீது 53% வரை டிஸ்கவுண்ட்!
இதுதான் புது ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம். ஏனென்றால் - ஆன்லைன் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் மீதான விலை உயர்வு எதிரொலிக்க தொடங்கி உள்ளன. தொடர்ச்சியாக பல மொபைல் நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை கடுமையாக உயர்த்தி வருகின்றன.
இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்றால் ஸ்மார்ட்போன்கள் விலைக்கு ஸ்மார்ட் டிவிகளின் விலைகள் உள்ளன. அமேசான் இந்தியாவில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூ.15,000 பட்ஜெட்டில் தொடங்குகின்றன. 55-இன்ச் ரூ.25,000 பட்ஜெட்டில் தொடங்குகின்றன. ஆனால் நீங்கள் நினைப்பது போலவே அவைகள் பெரிய மற்றும் பிரபலமான ஸ்மார்ட் டிவி பிராண்டுகளின் மாடல்கள் அல்ல.

அதற்காக பிராண்டட் டிவிகள் மீது ஆபர் இல்லை என்று அர்த்தமில்லை. அமேசான் இந்தியாவில் தற்போது - 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் என 3 வெவ்வேறு டிஸ்பிளே அளவுகளை கொண்ட பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவிகள் மீது 53% வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
எந்த மாடல்? டிஸ்கவுண்ட் விலையில் கிடைப்பது - 55, இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஆகிய அளவுகளில் கிடைக்கும் பிலிப்ஸ் 4கே அல்ட்ரா எச்டி க்யூஎல்இடி ஸ்மார்ட் க்யூடி-மினி எல்இடி கூகுள் டிவி 55MLED610/94 (Philips 4K Ultra HD QLED Smart QD-Mini LED Google TV) மாடல் ஆகும்.
என்ன விலை?
55-இன்ச் மாடல் எம்ஆர்பி விலையான ரூ.84,999 க்கு பதிலாக 46% தள்ளுபடியை பெற்று ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது.
65-இன்ச் மாடல் எம்ஆர்பி விலையான ரூ.99,999 க்கு பதிலாக 42% தள்ளுபடியை பெற்று ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது.
75-இன்ச் மாடல் எம்ஆர்பி விலையான ரூ.1,89,999 க்கு பதிலாக 53% தள்ளுபடியை பெற்று ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது.
என்னென்ன அம்சங்கள்?
- டால்பி விஷன்
- லோக்கல் டிம்மிங் சீரிஸ்
- 120 ஹெர்ட்ஸ் மோஷன் கிளாரிட்டி எச்எஸ்ஆர்
- HDR 10+ ஆதரவு
- 4கே மினி எல்இடி (3840 x 2160) ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்எஸ்ஆர்
- 36W சவுண்ட் அவுபுட்
- டால்பி அட்மாஸ்
- டால்பி ஆடியோ
- கூகுள் டிவி ஓஎஸ்
- 2GB ரேம் + 32GB ரோம்
- குவாட் கோர் ப்ராசஸர்
- டூயல் பேண்ட் வைஃபை 5
- ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல்
- ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் பல பில்ட்-இன் ஆப்கள்
- இண்டர்நெட் பிரவுசர்
- ஸ்கிரீன் மிரரிங்
- கூகுள் அசிஸ்டன்ட்
- பிலிப்ஸ் ஹாலோ கண்ட்ரோல் டெக்னாலஜி
- 3 HDMI போர்ட்கள்
- 2 USB போர்ட்கள்
- 1 LAN போர்ட்
- 1 ஆன்டெனா இன்புட்
- 1 சாட்டிலைட் இன்புட்
- 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் (ஆப்டிகல்)
- 1 ஏவி-இன்
- 1 இயர்போன்
- டிவி வாங்கிய தேதியிலிருந்து 1 வருட உத்தரவாதம்
பெரிய பிராண்ட் வேண்டாம் புது டிவி போதும்: ரூ.15,000 க்கு கிடைக்கும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் - விடபுள்யூ 43-இன்ச் நானோ சின்க் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஜியோடெலி ஓஎஸ் க்யூஎல்இடி டிவி (VW 43-inch Nano Sync Series 4K Ultra HD Smart JioTele OS QLED TV - VW43JQ1) ஆகும். இதேபோல ரூ.25,000 க்கு கிடைக்கும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் - பாக்ஸ்கை 55-இன்ச் பிரேம்லெஸ் சீரீஸ் க்யூஎல்இடி 4கே எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Foxsky 55-inch) Frameless Series QLED 4K Ultra HD LED Smart TV - FS55GATV) ஆகும்.


Click it and Unblock the Notifications