பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ஆஃபரில் பிலிப்ஸ் 4கே டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (PHILIPS 50 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025) மாடல் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட்டில் பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி 2025 டிவி அம்சங்கள் (PHILIPS 50 inch QLED Ultra HD 4K Google TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே கியூஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) கொண்டுள்ளது.
அதுவும் வைடு கலர் காமட் (Wider Color Gamut), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), ஐ கேர் (Eye Care) மற்றும் எம்இஎம்சி (MEMC), எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த பிலிப்ஸ் 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டிவி அல்ட்ரா நேரவ் பெசல் டிசைன் (Ultra-narrow Bezel Design) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தனித்துவமான சினிமாடிக் ஆடியோ (Cinematic Audio), டால்பி ஆடியோ (Dolby Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் இந்த பிலிப்ஸ் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இதில் 2.0 சேனல் ஸ்பீக்கர்கள் (2.0 Channel Speakers) உள்ளன. ஆகவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த பிலிப்ஸ் டிவியில் உள்ளன.

ஏ55 சிப்செட் (A55 Chipset) உடன் பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
பிலிப்ஸ் 50 இன்ச் டிவியில் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஏவி போர்ட் (AV Port), ஆப்டிகல் (Optical), ஈதர்நெட் (Ethernet) போர்ட் மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) ஆதரவுகளும் உள்ளன. இதுதவிர டூயல் பேண்ட் வை-பை (Dual band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி ஆதரவுகளும் டிவியில் உள்ளன. மேலும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications
