பழைய டிவிக்கு இனி குட்பை.. 50 இன்ச் 4K டிவிக்கு விலை குறைப்பு.. டால்பி அட்மாஸ்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?
பிலிப்ஸ் (Philips) நிறுவனத்தின் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் டிவிகளை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 50 இன்ச் பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட்டில் பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (PHILIPS 50 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025) மாடல் முன்பு ரூ.32,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.24499 விலையில் வாங்கிவிட முடியும்.

பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Philips 50 inch QLED TV Specifications): இந்த 50 இன்ச் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே கியூஎல்இடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) கொண்டுள்ளது.
வைடு கலர் காமட் (Wider Color Gamut), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), ஐ கேர் (Eye Care) மற்றும் எம்இஎம்சி (MEMC), எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த பிலிப்ஸ் 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டிவி அல்ட்ரா நேரவ் பெசல் டிசைன் (Ultra-narrow Bezel Design) உடன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சினிமாடிக் ஆடியோ (Cinematic Audio), டால்பி ஆடியோ (Dolby Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் இந்த பிலிப்ஸ் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இதில் 2.0 சேனல் ஸ்பீக்கர்கள் (2.0 Channel Speakers) உள்ளன. ஆகவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த பிலிப்ஸ் டிவியில் உள்ளன.
தரமான ஏ55 சிப்செட் (A55 Chipset) உடன் பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

இந்த டிவியில் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஏவி போர்ட் (AV Port), ஆப்டிகல் (Optical), ஈதர்நெட் (Ethernet) போர்ட் மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) ஆதரவுகளும் உள்ளன. இதுதவிர டூயல் பேண்ட் வை-பை (Dual band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி ஆதரவுகளும் டிவியில் உள்ளன.
ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் மாடல் நம்பர் 50PQT8100/94 ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பிலிப்ஸ் 50 இன்ச் கியூஎல்இடி டிவி கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








