போட்டான் பாரு பிலிப்ஸ்.. ரூ.5,250 ஆஃபரில் 50 இன்ச் QLED டிவி.. டால்பி அட்மோஸ்.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் (Amazon Great India Festival) விற்பனையில் பிலிப்ஸ் டிவி மாடல்கள் தள்ளுபடியில் வாங்க கிடைக்கின்றன. பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (PHILIPS 50 inch 4K Ultra HD Smart QLED Google TV) மாடலுக்கு கூப்பன் ஆஃபர் மற்றும் கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது.
இப்போது, அமேசான் விற்பனையில் பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவிக்கு 14 சதவீத நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.30,999 விலைக்கு வாங்கலாம். மேலும், எந்த கார்டு பேமெண்ட்டும் செய்யாமலேயே ரூ.1,000 கூப்பன் ஆஃபர் கிடைக்கிறது. ஆகவே, ரூ.29,999 விலைக்கு வாங்கலாம்.

இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.4,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக ரூ.5,250 தள்ளுபடியில் இந்த பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையையும் இந்த டிவிக்கு கிடைக்கிறது.
பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (PHILIPS 50 inch 4K Ultra HD Smart QLED Google TV Specifications): 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) பயன்படுத்தலாம். மேலும், குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) வருகிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv மற்றும் யூடியூப் (Youtube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
30W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுத்துள்ளது. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் யூஎச்டி (UHD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 (HDR10) போன்ற டிஸ்பிளே பீச்சர்களை இந்த பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுத்து இருக்கிறது.
அல்ட்ரா நேரவ் பெசல் டிசைன் (Ultra-narrow Bezel Design) கொடுக்கிறது. மேலும், வைடு கலர் காமட் (Wider Color Gamut), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), ஐ கேர் (Eye Care) மற்றும் எம்இஎம்சி (MEMC) உள்ளன. டூயல் பேண்ட் வை-பை (Dual band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளை கொண்டுள்ளது.
3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) கொண்ட மாடலாக இந்த பிலிப்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஏவி போர்ட் (AV Port), ஆப்டிகல் (Optical), ஈதர்நெட் (Ethernet) மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) போர்ட்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications
