ஆர்டர் தூள் பறக்க போகுது.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் பிலிப்ஸ் 4கே டிவி.. எந்த மாடல்?
பிலிப்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (PHILIPS 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) மாடல் ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவி மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட்டில் பிலிப்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.27,999 விலையில் வாங்கிவிட முடியும்.

பிலிப்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Philips 43 inch QLED TV Specifications): பிலிப்ஸ் 43 இன்ச் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே கியூஎல்இடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் வைடு கலர் காமட் (Wider Color Gamut), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), ஐ கேர் (Eye Care) மற்றும் எம்இஎம்சி (MEMC), எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த பிலிப்ஸ் 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இந்த டிவி அல்ட்ரா நேரவ் பெசல் டிசைன் (Ultra-narrow Bezel Design) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக சினிமாடிக் ஆடியோ (Cinematic Audio), டால்பி ஆடியோ (Dolby Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் இந்த பிலிப்ஸ் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இதில் 2.0 சேனல் ஸ்பீக்கர்கள் (2.0 Channel Speakers) உள்ளன. ஆகவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
அதுவும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த பிலிப்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த பிலிப்ஸ் டிவியில் உள்ளன.

தரமான ஏ55 சிப்செட் (A55 Chipset) உடன் பிலிப்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
மேலும் இந்த டிவியில் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஏவி போர்ட் (AV Port), ஆப்டிகல் (Optical),ஈதர்நெட் (Ethernet) போர்ட் மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) ஆதரவுகளும் உள்ளன. இதுதவிர டூயல் பேண்ட் வை-பை (Dual band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி ஆதரவுகளும் டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications