Home
Gadgets

சும்மா நச்சுனு இருக்கே.. 2 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

இந்திய சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துவருகின்றன. அதேபோல் சில
நிறுவனங்கள் இப்போது கம்மி விலையில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்நிலையில் பிரபலமான நிறுவனம் ஒன்று இந்தியாவில் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது பிரபலமான Pebble நிறுவனம் இந்தியாவில் பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் என இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

2 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த பெபில்.!

தனித்துவமான வடிமைப்பு
புதிய பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வட்ட வடிவம் கொண்ட டயல், பிரீமியம் மெட்டாலிக் கேசிங், சுழுலும் கிரவுன் உள்ளது. பின்பு இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட பெபில் ஸ்பெக்ட்ரா விஷன் ஸ்மார்ட்வாட்ச் ஆனது சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டல் அலாய் கேசிங், சுழுலும் கிரவுன்,வளைந்த கிளாஸ் எட்ஜ்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்துள்ளது பெபில் நிறுவனம்.

டிஸ்பிளே எப்படி?
பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது 1.43-இன்ச் AMOLED வட்ட வடிவ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த பெபில்.!

மேலும் பெபில் ஸ்பெக்ட்ரா விஷன் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 2.05-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் இன்பில்ட் ஸ்பீக்கர் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கும். பின்பு குயிக் கீபேட் ஷாட்கட்கள், ரிசெண்ட் லாக்ஸ் போன்ற பல அட்டகாசமான வசதிகளுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்கள் வெளிவந்துள்ளது.

2 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த பெபில்.!

முக்கிய அம்சங்கள்
பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் SpO2 சென்சார், ஹார்ட் ரேட் மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், ஸ்லீப் மாணிட்டர் என மேம்பட்ட ஹெல்த் மாணிட்டரிங் அம்சங்கள் மற்றும் பெபில் ஜென் மோட் உள்ளது. குறிப்பாக இந்த முக்கிய அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

ஸ்போர்ட்ஸ் மோட்கள்?
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் 100-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் இட்பெற்றுள்ளன. அதேபோல் இவை வாய்ஸ் அசிஸ்டண்ட்
ஆதரவையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், இன்பில்ட் கேம்ஸ், கேலண்டர், ஸ்மார்ட் கால்குலேட்டர்
எனப் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளன இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள்.

2 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த பெபில்.!

IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன இந்த பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள். பின்பு மியூசிக், வானிலை, காண்டாக்ட், டார்ச், ஸ்டாப்வாட்ச் போன்ற அம்சங்களை கொண்டுள்ளன இந்த இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள்.குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

என்ன விலை?
பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.4999-ஆக உள்ளது. மிட்நைட் கோல்டு, ஈவ்னிங் கிரே, ஜெட் பிளாக் மற்றும் மூன்லைட் கிரே நிறங்களில்
இந்த பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பெபில் விஷன் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.3,599-க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஈவ்னிங் புளூ நிறங்களில் கிடைக்கும். அதேபோல் இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் பெபில் வலைதளம் மற்றும் ஆஃப்லைன்
ஸ்டோர்களில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pebble Spectra Pro and Vision smartwatch models launched in India at budget prices : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X