பேரு மட்டும் புதுசு., செய்யுற வேலை எல்லாம் தினுசு- ரிச் லுக் உடன் Pebble Cosmos Ultra ஸ்மார்ட்வாட்ச்!

|

Pebble Cosmos Ultra ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ப்ளூடூத் 5.1 ஆதரவைக் கொண்டிருக்கிறது.

வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம்

வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம்

Pebble ஸ்மார்ட்வாட்ச் என்று கேட்ட உடன் பெயர் புதிதாக இருக்கிறது. இதில் எதற்கு பணத்தை செலவு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று தோன்றலாம்.

ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் நீடித்த ஆயுட்காலம், சிறந்த வடிவமைப்பு, தரமான அம்சங்கள் மற்றும் மேம்பட்ட சாஃப்ட்வேர் உடன் அறிமுகமாகும் வாட்ச்களில் இந்த நிறுவனமும் பிரதான ஒன்று. சமீபத்திய காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் பெப்பிளும் ஒன்று.

Pebble Cosmos Ultra ஸ்மார்ட்வாட்ச்

Pebble Cosmos Ultra ஸ்மார்ட்வாட்ச்

பெப்பிள் நிறுவனம் இந்தியாவில் Pebble Cosmos Ultra என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெசல் லெஸ் டிஸ்ப்ளே ஆதரவு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள் கண்காணிப்பு ஆதரவை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளூடூத் காலிங் ஆதரவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் மூலம் நேரடியாக அழைப்புகளை எடுத்து பேசலாம்.

காஸ்மோஸ் அல்ட்ரா விலை என்ன?

காஸ்மோஸ் அல்ட்ரா விலை என்ன?

பெப்பிள் காஸ்மோஸ் அல்ட்ரா நான்கு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. அது ஈவ்னிங் க்ரே, மூன்லைட் க்ரே, ஸ்பேஸ் ப்ளாக் மற்றும் மிண்ட் க்ரீன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.2999 விலையில் தொடங்கப்பட்டுள்ளது.

Pebble Cosmos Ultra ஆனது pebblecart.com மற்றும் Flipkart இல் விற்பனைக்கு கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் கடைகளிலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கலாம்.

உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன்

உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன்

ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.91 இன்ச் "பெசல்-லெஸ்" டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் ப்ளூடூத் காலிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச்.

ப்ளூடூத் 5.1 தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன்மூலம் நேரடியாக அழைப்புகளை எடுத்து பேசலாம்.

அதன்படி ஒவ்வொரு முறையும் உங்கள் போனை வெளியே எடுக்கத் தேவையில்லை, ப்ளூடூத் வாட்ச் மூலமாகவே அழைப்புகளை மேற்கொள்ளவும், எடுக்கவும் முடியும்.

நிகழ்நேர கண்காணிப்பு செயல்பாடு

நிகழ்நேர கண்காணிப்பு செயல்பாடு

ஸ்மார்ட்வாட்ச் பக்கவாட்டில் இருக்கும் ஆக்டிவ் கிரவுன் பட்டன் மூலம் டயல் பேடை மேலும் மேம்படுத்தலாம். மேலும் இந்த பட்டனை உருட்டுவதன் மூலம் மெனு ஆப்ஷன்களை நகர்த்திக் கொள்ளலாம்.

பெப்பிள் காஸ்மோஸ் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 24×7 ஹெல்த் கண்காணிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ரத்த ஆக்ஸிஜன் அளவு, இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

விளையாட்டு முறைமைகளை பொறுத்தவரை இதில் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு முறை ஆதரவுகள் உள்ளது. உடற்பயிற்சி செய்யும் போது இந்த ஸ்மார்ட்வாட்ச்சை அணிந்து கொண்டால் நிகழ்நேர கண்காணிப்பு செயல்பாட்டை பெறலாம்.

கடினமான கண்ணாடி ஆதரவு

கடினமான கண்ணாடி ஆதரவு

Pebble நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பெண்களுக்கான வீனஸ் ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்தியது.

பெப்பிள் வீனஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது மெட்டாலிக் பாடி உடன் கடினமான கண்ணாடி ஆதரவைக் கொண்டிருந்தது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது மிகவும் நேரத்தியான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1.09 எச்டி டிஸ்ப்ளே உடன் சிறிய சுற்று டயல் பேடைக் கொண்டுள்ளது.

பட்டியலில் ஏணைய வாட்ச்கள்

பட்டியலில் ஏணைய வாட்ச்கள்

பெப்பிள் ஸ்மார்ட்வாட்ச்கள் இந்திய சந்தையில் ரூ.1199 முதல் கிடைக்கிறது. ரூ.1199 கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்சின் பெயரே Kardio+ தான். இதன் பெயரை கேட்டதுமே அறிந்துவிடலாம் இது உடல்நல கண்காணிப்பு தேவைக்கு சிறந்தது என்று. அதேபோல் ஃபிட்னஸ் தேவைக்கும் சிறந்த முறையில் செயல்படுகிறது.

சமீபத்தில் அறிமுகமான Pebble Cosmos Ultra விலை ரூ.2999 ஆகும். இன்னும் சற்று விலை உயர்ந்த வாட்ச்சை தேடினால், பெப்பிள் தளத்தில் ஏணைய வாட்ச்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

தரம் வாய்ந்த டிஸ்ப்ளே

தரம் வாய்ந்த டிஸ்ப்ளே

பெப்பிள் நிறுவனத்தின் ரூ.5499 விலையுள்ள வாட்ச் ஆனது பெப்பிள் ஸ்பெக்ட்ரா என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்வாட்ச் ஆகம்.

ஒரு ஸ்மார்ட்வாட்ச் இடம் இருந்து என்னென்ன அம்சங்கள் எதிர்பார்ப்போமோ அத்தனையும் இதில் இருக்கிறது. அமோலெட் டிஸ்ப்ளே உடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே தரத்திற்கு மிகவும் புகழ்பெற்றது.

Best Mobiles in India

English summary
Pebble Cosmos Ultra Launched with Bluetooth Calling, Built in Speakers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X