ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் பிரபல நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: அனைத்து அம்சமும் இருக்கு: விலை?

|

தற்போது இந்தியச் சந்தையில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பட்ஜெட் விலையில் பல நிறுவனங்கள் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் பிரபலமான பெபில் நிறுவனத்தின் புதிய காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச்

காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச்

குறிப்பாக இந்த காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது தான் சிறப்பு. இப்போது இந்த பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பியூச்சர்ல லேப்டாப்லாம் இப்படி மாறிடுமா? Lenovo-வின் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.! 1 இல்ல 3 டைப்ல யூஸ்.!பியூச்சர்ல லேப்டாப்லாம் இப்படி மாறிடுமா? Lenovo-வின் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.! 1 இல்ல 3 டைப்ல யூஸ்.!

1.95-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே

1.95-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே

பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.95-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம், 320x385 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

2023 ஆரம்பமே அமோகமா இருக்கே! இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 7 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!2023 ஆரம்பமே அமோகமா இருக்கே! இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 7 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!

சிலிகான் ஸ்டிராப்கள்

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வெளிப்புறத்தில் ரக்கட் தோற்றம், சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் கேசிங் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு இதனுடன் சுழலும் கிரவுன் மற்றும் பட்டன் வழங்கப்பட்டுள்ளன.

இதுதான் WhatsApp-க்கு வந்ததுலேயே உருப்படியான புதிய அம்சம்.. சைலன்ட் ஆக வந்த சூப்பர் Setting!இதுதான் WhatsApp-க்கு வந்ததுலேயே உருப்படியான புதிய அம்சம்.. சைலன்ட் ஆக வந்த சூப்பர் Setting!

ப்ளூடூத் 5.0 வசதி

ப்ளூடூத் 5.0 வசதி

பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது இன்பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்குகிறது. அதேபோல் ப்ளூடூத் 5.0 வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்லீப் டிராக்கர்

ஸ்லீப் டிராக்கர்

ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற சிறப்பு அம்சங்களை வழங்குகிறது பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச். மேலும் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

அதேபோல் பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும் இதை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி கூட வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏஐ சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் WhatsApp-க்கு வந்ததுலேயே உருப்படியான புதிய அம்சம்.. சைலன்ட் ஆக வந்த சூப்பர் Setting!இதுதான் WhatsApp-க்கு வந்ததுலேயே உருப்படியான புதிய அம்சம்.. சைலன்ட் ஆக வந்த சூப்பர் Setting!

காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் விலை

காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் விலை

இந்த பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் உண்மை விலை ரூ.7,499-என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் அறிமுக சலுகையாக ரூ.3,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். அதேபோல் ஆரஞ்சு, ஸ்டார்லைட், மிட்நைட் பிளாக் மற்றும் செலஸ்டியல் புளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Pebble Cosmos Engage smartwatch launched with 5 days battery backup: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X