எந்த ஸ்மார்ட்வாட்ச்சிலும் இல்லாத 1 இதுல இருக்கு.! ஒன்றுக்கு இரண்டாக ஆர்டர் செய்யும் மக்கள்!
இதுவரை இப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை யாருமே வாங்கி இருக்க முடியாது.. என்று கூறும் அளவிற்கு இந்த புதிய Pebble Cosmos Bold Smartwatch சாதனம் அறிமுகமாகியுள்ளது. அப்படி என்ன இதுவரை கிடைக்காத புது விஷயம் இதில் உள்ளதென்று பார்க்கலாம் வாங்க.
பெப்பில் (Pebble) நிறுவனம் இந்தியாவில் Pebble Cosmos Bold என்ற ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. Pebble Cosmos Bold ஆனது முழுமையான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களை வழங்கும் அதே வேளையில், பிரீமியமாக தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச், கால்குலேட்டர், கேலெண்டர், ஒரு SpO2 சென்சார் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இதன் விலைக்கு இதில் புளூடூத் காலிங் அம்சம், மாற்றக்கூடிய சிலிகான் ஸ்ட்ராப்கள் மற்றும் டஃப் செய்யப்பட்ட டயல் கிளாஸ் உடன் இது வருகிறது. இந்த Pebble Cosmos Bold ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஏற்கனவே பல்வேறு ஆன்லைன் சேனல்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இதன் விலை என்ன? இதில் இருக்கும் சிறப்பம்சம் என்ன? எந்த ஸ்மார்ட் வாட்ச் உடனும் கிடைக்காத ஒரு பொருள் கிடைக்கிறது. அது என்ன? என்பதை பார்க்கலாம்.
Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2,299 மட்டுமே. இது இப்போது ஜெட் பிளாக், மிட்நைட் கோல்ட், விண்டர் ப்ளூ மற்றும் மிஸ்டி கிரே வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது. Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச்சை வாங்க விருப்பம் உள்ளவர்கள் தற்போது Flipkart மற்றும் Pebble இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இவற்றை வாங்கலாம்.
Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச் HD தீர்மானம் கொண்ட 1.39' இன்ச் உடைய வட்ட IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 500 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் திறன் கொண்டது. இந்த Pebble Cosmos Bold ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 260 mAh பேட்டரி உடன் பேக் செய்யப்பட்டுள்ளது. பெப்பில் நிறுவனத்தின் தகவலின் படி, இது ஏழு நாட்கள் ஸ்டாண்ட்பை நேரத்தை வழங்குகிறது.

Pebble Cosmos Bold ஒரு ஷாக் ப்ரூப் அலாய் உலோக கலவை கட்டுமானத்தை கொண்டுள்ளது. உடற்பயிற்சி மற்றும் சுகாதார தரவை வழங்குவதற்கான ஸ்டெப் கவுண்ட் பெடோமீட்டர், SPO2 மற்றும் இதய துடிப்பு மானிட்டர் ஆகியவற்றை இந்த Pebble Cosmos Bold ஸ்மார்ட் வாட்ச் சாதனம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் iOS மற்றும் Android உடன் இணக்கமானது.
இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சங்கள் உள்ளது. பெப்பிள் காஸ்மோஸ் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அலாரம் & அறிவிப்பு, ஜென் மோட், ஸ்லீப், டிஸ்ப்ளே டைமர், ஃப்ளாஷ்லைட், ஃபைண்ட் ஃபோன், வாய்ஸ் அசிஸ்டென்ட், மியூசிக், கேமரா ஷட்டர் மற்றும் மெனு ஸ்டைல் போன்ற அம்சங்களையும் பெறுகிறது. ஸ்மார்ட்வாட்ச் 100+ வாட்ச் பேஸ்களையும் ஆதரிக்கிறது.
Pebble Cosmos Bold ஆனது அதன் மாறக்கூடிய சிலிகான் ஸ்ட்ராப்களுடன் கஸ்டமைஸ் செய்யும் விருப்பத்தை வழங்குகிறது. பெப்பிள் காஸ்மோஸ் போல்ட் ஸ்மார்ட் வாட்ச் IP67 பாதுகாப்புடன் பல ஸ்போர்ட்ஸ் மோட்-ஐ ஆதரிக்கிறது. இந்த Pebble Cosmos Bold ஸ்மார்ட் வாட்ச் உடன் கிளாஸ் ப்ரொடெக்டர் டெம்பர் கிளாஸ், ஸ்கிரீன் வைப்ஸ் போன்றவை பாக்ஸுடன் கிடைக்கிறது. இது வேறு எந்த சாதனத்துடனும் இப்போது கிடைப்பதில்லை.


Click it and Unblock the Notifications








