சிஇஎஸ் 2018: பானாசோனிக் ஓஎல்இடி டிவிகள், இரட்டை-ஐஎஸ்ஓ கேமரா அறிமுகம்

|

இந்தாண்டும் ஓஎல்இடி டிவியின் சந்தை உருவெடுத்து வருகிறது. இந்த போக்கு கடந்தாண்டே அறிமுகம் செய்யப்பட்டாலும், சிஇஎஸ் 2018 டெக் ஷோவில் கலந்து கொண்ட பல நிறுவனங்களும், இது போன்ற தயாரிப்புகளைக் களமிறக்கி உள்ளன.

சிஇஎஸ் 2018: பானாசோனிக் ஓஎல்இடி டிவிகள், இரட்டை-ஐஎஸ்ஓ கேமரா அறிமுகம்

இந்தப் பட்டியலில் பானாசோனிக் நிறுவனமும் ஒன்று. தற்போது நடந்துவரும் சிஇஎஸ் 2018 டெக் ஷோவில், ஒரு கூட்டம் தயாரிப்புகளுடன் இந்நிறுவனம் களமிறங்கி உள்ளது. பானாசோனிக் எப்இசட்950 மற்றும் எப்இசட்800 ஓஎல்இடி டிவிக்கள், லூமிக்ஸ் ஜிஹெச்5எஸ் கேமரா, புதிய இரண்டு யூஹெச்டி ப்ளூ-ரே ப்ளேயர்கள், ஒரு கூட்டம் காம்கோர்டர்கள், ஹேம் எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் ஸ்மார்ட் ஹோம் மற்றும் பல்வேறு தயாரிப்புகளை, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் உடன் இணைந்து செயலாற்றி, கார்களுக்காக ஆக்ஸிலா வாய்ஸ் அசிஸ்டெண்ட் உதவியை பெற உள்ளதாக பானாசோனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் உடனான இந்நிறுவனத்தின் தற்போதைய கூட்டமைப்பைத் தொடர்கிறது.

இந்த ஒருங்கிணைப்பின் உச்சமாக, பானாசோனிக் மூலம் உருவாக்கப்பட்ட கார் டிஸ்ப்ளே அம்சம் செயல்படுகிறது. இதன்மூலம் பானாசோனிக் அளிக்கும் கார் டிஸ்ப்ளே மூலம் கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை இயக்க முடியும்.

பானாசோனிக் எப்இசட்950 மற்றும் எப்இசட்800 ஓஎல்இடி டிவிகள்

பானாசோனிக் எப்இசட்950 மற்றும் எப்இசட்800 ஓஎல்இடி டிவிகள்

இந்த ஆண்டிற்கான முன்னணி ஓஎல்இடி டிவிகளான பானாசோனிக் எப்இசட்950 மற்றும் எப்இசட்800 ஆகியவை, சிஇஎஸ் 2018 டெக் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த நவீன டிவிக்களிலும், இதன் முன்னோடிகளைப் போல, வெளிர் நிறங்கள் மற்றும் கடும் கருப்புத் தன்மை போன்ற அம்சங்கள் ஒத்து காணப்படுகின்றன. ஆனால் அவற்றையும் கடந்து, நாம் கவனிக்க வேண்டிய சில மேம்பாடுகள் காணப்படுகின்றன.

புதிய பானாசோனிக் ஓஎல்இடி டிவிக்கள் ஹெச்டிஆர் பிளஸை ஆதரிப்பதன் மூலம் ஹெச்டிஆர் உள்ளடக்கங்களுக்கான ஒரு புதிய திறப்பு கிடைத்துள்ளது. மேலும் இதில் ஹாலிவுட் மூலம் மெருகேற்றப்பட்ட ஹெச்சிஎக்ஸ் வீடியோ செயலியும் காணப்படுகிறது.

பானாசோனிக் எப்இசட்950-ல் 20டபில்யூ ட்விட்டர், 40டபில்யூ உஃப்பர் மற்றும் 20டபில்யூ நடுத்தர டிரைவர் ஆகியவற்றுடன் கூடிய ஒரு டெக்னிக்ஸ் மூலம் மெருகேற்றப்பட்ட ஸ்பீக்கர் காணப்படுகிறது. இந்த புதிய டிவி மாடல்களின் விலையைக் குறித்து, இந்நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

லூமிக்ஸ் ஜிஹெச்5எஸ்

லூமிக்ஸ் ஜிஹெச்5எஸ்

புதிய லூமிக்ஸ் ஜிஹெச்5எஸ் என்பது, வீடியோகிராஃபியை மையமாகக் கொண்ட ஜிஹெச்5 கேமராவின் மெருகூட்டப்பட்ட ஒரு வகை ஆகும். இதுவரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கேமராக்களிலேயே சிறந்த குறைந்த ஒளி உணர்திறன் கொண்டதாக ஜிஹெச்5எஸ் உள்ளது என்று பானாசோனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் படங்களில் ஒலியை உட்படுத்தும் திறனுள்ள இரட்டை-ஐஎஸ்ஓ, இந்த கேமராவில் காணப்படுகிறது. அதேபோல 30 எப்பிஎஸ் அல்லது 60 எப்பிஎஸ் நிலையிலும் 4கே வீடியோ பதிவு செய்ய முடிகிறது. குறிப்பிட்ட சில சந்தைகளில் அடுத்த மாதம் முதல் இந்த கேமராவின் விற்பனை துவங்க உள்ளது.

ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் புதிய லேப்டாப் அறிமுகம்.!ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் புதிய லேப்டாப் அறிமுகம்.!

யூபி-யூபி420 மற்றும் டிபி-யூபி820 அல்ட்ரா ஹெச்டி ப்ளு-ரே பிளையர்கள்

யூபி-யூபி420 மற்றும் டிபி-யூபி820 அல்ட்ரா ஹெச்டி ப்ளு-ரே பிளையர்கள்

யூபி-யூபி420 மற்றும் டிபி-யூபி820 ப்ளு-ரே பிளையர்கள், பயனர்களுக்கு ஒரு உகந்ததாக அமையும் ஹெச்டிஆர் அனுபவத்தை தர வல்லது என்று பானாசோனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் யூபி830 பிளையர், டால்பி விஷன் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ளு-ரே பிளையர், அல்ட்ரா ஹெச்டி பகுப்பாய்வை ஆதரிக்கிறது என்பது மற்றொரு சுவாரஸ்சியமான செய்தியாகும். இந்த ப்ளு-ரே பிளேயர்களுக்கு அக்ஸிலா மற்றும் கூகுள் ஹோம் ஆதரவைப் பெற வகையில், அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களுடன் பானாசோனிக் பணியாற்றி வருகிறது.

இந்த ப்ளு-ரே ஸ்பீக்கர்களுக்கான சாத்திய விலையைக் கூட இந்நிறுவனம் அறிவிக்காவிட்டாலும், இந்தாண்டின் இறுதியில் இது வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டபில்யூஎக்ஸ்1 மற்றும் விஎக்ஸ்1 காம்கோர்டர்கள்

டபில்யூஎக்ஸ்1 மற்றும் விஎக்ஸ்1 காம்கோர்டர்கள்

லூமிக்ஸ் ஜிஹெச்5எஸ்ஸை தவிர, இந்த நிகழ்வில் ஒரு கூட்டம் காம்கோர்டர்களைக் குறித்து பானாசோனிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் டபில்யூஎப்1 மற்றும் விஎக்ஸ்1 காம்கோர்டர்களைக் குறித்து தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்.

மேற்கூறிய இந்த காம்கோர்டர்களில் குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த செயல்பாட்டை அளிக்கும் வகையிலான ஒரு பின்னணி ஒளிரும் எம்ஓஎஸ் சென்ஸர், எப்/1.8 துளை மற்றும் 24எக்ஸ் வரையிலான ஆப்டிக்ல் ஜூம் காணப்படுவதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காம்கோர்டர்கள் மூலம் 30 எப்பிஎஸ்ஸில் கூட 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் இவற்றில் ஏற்கும் தன்மையுள்ள ஓஐஎஸ்ஸான பால் ஓஐஎஸ் உடன் கூடிய ஒரு புதிதாக வடிவமைக்கப்பட்ட மிகவும் மென்மையான ஓஐஎஸ் சிஸ்டம் அம்சம் காணப்படுகிறது. இந்த காம்கோர்டர் மாடல்கள், இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படலாம் என்பதோடு, விலை $799 என்று துவங்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
The OLED TV market is shaping up this year. It is at the CES 2018 tech show that many companies have started coming up with such products. Panasonic has announced FZ950 and FZ800 OLED TVs, the Lumix GH5S camera, two new UHD Blu-ray players, a couple of camcorders, the smart home initiative called Home X.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X