Home
Gadgets

சீன டிவிகளுக்கு சுளுக்கெடுத்த ஜப்பான் நிறுவனம்.. கொத்தாக 23 புதிய Google TV-களை அறிமுகம் செய்த Panasonic!

சீன நிறுவனங்களின் "படையெடுப்பிற்கு" பின்னர் ஸ்மார்ட்போன் சந்தையில் மட்டுமல்ல, ஸ்மார்ட் டிவி சந்தையிலும் கூட எம்ஐ (Mi), சியோமி (Xiaomi), டிசிஎல் (TCL), ஒன்பிளஸ் (OnePlus), ரியல்மி (Realme), ஹைசென்ஸ் (Hisense), ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது!

இதற்கிடையில், 1952 ஆம் ஆண்டிலேயே தனது முதல் டிவியை அறிமுகம் செய்த, பழம்பெரும் ஜப்பானிய நிறுவனமான பானாசோனிக் (Panasonic) இந்திய சந்தையில் - ஒன்றல்ல, இரண்டல்ல - மொத்தம் 23 புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து, ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளர்களையும் திக்குமுக்காட வைத்துள்ளது.

கொத்தாக 23 புதிய Google TV-களை அறிமுகம் செய்த Panasonic!

இந்திய சந்தையில் இரண்டு 4கே ஓஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய கையோடு பானாசோனிக் நிறுவனமானது அதன் புதிய கூகுள் டிவிகளையும் (Google TV) அறிமுகம் செய்துள்ளது. அதாவது பானாசோனிக் அறிமுகம் செய்துள்ள 23 புதிய ஸ்மார்ட் டிவிகளுமே கூகுள் டிவி பிளாட்ஃபார்ம் (Google TV platform) மூலம் இயங்கும்.

பானாசோனிக் அறிமுகம் செய்துள்ள 23 ஸ்மார்ட் டிவிகளும் வெவ்வேறு டிஸ்பிளே அளவுகளில் வருகின்றன. அதாவது 32-இன்ச், 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், மற்றும் 75-இன்ச் அளவுகளில் வருகின்றன. இவற்றின் விலை நிர்ணயம் ரூ.19,990 முதல் ரூ.3,19,990 வரை செல்கிறது. அனைத்து டிவிகளுமே பான்சோனிக் ஸ்டோர்கள், டீலர் நெட்வொர்க்குகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் வழியாக வாங்க கிடைக்கின்றன.

அம்சங்களை பொறுத்தவரை, 4கே எச்டிஆர் (4K HDR) உடன் வரும் பானாசோனிக் கூகுள் டிவிகளில், ஒரு அதிநவீன 4கே கலர் எஞ்சின் (4K Color Engine) பொருத்தப்பட்டிருக்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு காட்சியின் இருண்ட மற்றும் பிரகாசமான பகுதிகளை மேம்படுத்தி, உங்களுக்கு யதார்த்தமான காட்சி அனுபவத்தை வழங்கும்.

மேலும் இந்த தொழில்நுட்பம் எச்டி / எஃப்எச்டி கன்டென்ட்டிற்கான ஹை-ரெசல்யூஷன் மேம்பாட்டையும் (High-Resolution Upscaling) கொண்டுள்ளது, இது பிரமிக்க வைக்கும் பிக்சர் டீடெயில்களை (Picture Details) வழங்கும். இந்த டிவி மாடல்களில் அக்யூவியூ டிஸ்பிளே (Accuview Display) என்கிற புதுமையான அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தின் கீழ் ஒரு அறையின் எந்த பகுதியிலிருந்தும் சரியான, உண்மையான படம் பார்க்கும் அனுபவம் உறுதி செய்யப்படும். மேலும் இந்த டிவிகளில் உள்ள ஹெக்ஸா க்ரோம் டிரைவ் (Hexa Chrome Drive), அல்ட்ரா வைட் கலர் கேமட் (Ultra Wide Color Gamut) போன்ற அம்சங்கள் ரியல்-லைஃப் வண்ணங்களை உறுதி செய்கின்றன.

பொதுவான மற்ற அம்சங்களை பொறுத்தவரை, பானாசோனிக்கின் புதிய கூகுள் டிவி சீரீஸ் மாடல்களானது டால்பி அட்மோஸ் (Dolby ATMOS) உடன் வருகின்றன. குறிப்பிடத்தக்க தெளிவு மற்றும் ஆழமான ஒலி அனுபவத்தை வழங்க உதவுகிறது. மேலும் பானாசோனிக்கின் அதிநவீன பில்ட்-இன் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களானது சினிமா தியேட்டர் அனுபவத்தை வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Panasonic Launched 23 New Smart TV Models in India Powered by Google TV OS Check Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X