இனி மொபைல் மூலம் ஃபேன் இயக்கமுடியும்: இதோ ஒரு அட்டகாசமான அறிமுகம்.!

|

ஓட்டோமேட் நிறுவனம் இந்தியாவில் புதிய ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மலிவான விலையில் முதல் முறையாக இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் ஃபேன்

புதிய ஸ்மார்ட் ஃபேன்

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஃபோலே நிறுவனத்தின் உதவியுடன் இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் உடன் சேர்த்து இன்னும் பல புதிய ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை ஓட்டோமேட் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ப்ளூடூத் மெஷ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஸ்மார்ட் ஃபேன்

ப்ளூடூத் மெஷ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஸ்மார்ட் ஃபேன்

ப்ளூடூத் மெஷ்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன், குயலக்காம் CSR1020 சிப்செட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரத்தியேக ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் செயலியையும் அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

எல்லையில்லா வேகத் தேர்வு

எல்லையில்லா வேகத் தேர்வு

சாதாரண ஃபேன்களில் ஐந்து நிலை வேகத் தேர்வு மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் இல் ஐந்திற்கும் மேற்பட்ட ஃபேன் வேக நிலை தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் உங்கள் ஸ்மார்ட்போன் இல் ஓட்டோமேட் செயலியைப் பயன்படுத்தி, உங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஃபேன்னின் வேகத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஏப்ரல் 2 முதல் விற்பனை

ஏப்ரல் 2 முதல் விற்பனை

இந்த புதிய ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் இன் அடுத்த மாடல், கூகுள் அசிஸ்டன்ட் சேனையுடன் விரைவில் விற்பனைக்குக் களமிறக்கப்படுமென்று ஓட்டோமேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அணைத்து ஈ-கமெர்ஸ் வலைத்தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

விலை

விலை

ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் இன் ஸ்டாண்டர்ட் மாடல் இந்திய சந்தையில் வெறும் ரூ. 3,999 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் ரெடி மாடல் இந்தியாவில் வெறும் ரூ.2.999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன்களின் ரிமோட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.149 தனியாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ottomate Smart Fan Launched in India at Rs 3999 Company to Bring Smart Lights Later This Year : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X