பட்ஜெட் விலையில் மிரட்டலான Oraimo ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்! இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலையில் கிடைக்கக் கூடிய ஸ்மார்ட் கேட்ஜெட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.முக்கியமாக ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக இந்தியச் சந்தையில் அதிக வரவேற்புள்ள சாதனம் இயர்போன்கள் தான். குறிப்பாக தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வயர்லெஸ் ஸ்மார்ட் வயர்லெஸ் இயர்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

'ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்' நோக்கி செல்லும் பயனர்கள்
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அனைவரும் வயர்லெஸ் இயர்போன்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று 'ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்' பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் கச்சிதமாகக் காதுகளில் பொருந்தும் இந்த கூலான கேட்ஜெட் மீது மக்களின் கவனம் இப்பொழுது திரும்பியுள்ளது.

எப்படித் சரியான இயர்பட்ஸை தேர்வு செய்வதென்ற குழப்பமா?
ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் வாங்க நினைக்கும் பயனர்களுக்குத் தடையாய் இருப்பது அவற்றை எப்படித் தேர்வு செய்வதென்ற குழப்பம் தான். வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்களை விட அதிக விலையில் தான் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களின் ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் டிரான்ஸ்சனின் துணை பிராண்டான ஓராய்மோ மட்டும் பட்ஜெட் விலையில் தனது ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்
இந்தியப் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது தயாரிப்பை உருவாக்கி வரும் ஓராய்மோ நிறுவனம் தற்பொழுது, புதிய Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் என்ற ப்ளூடூத் 5.0 இணக்கத்துடன் கூடிய இயர்பட்ஸை இந்தியச் சந்தையில் வெறும் அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமாக டிசைன்
Oraimo அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் அட்டகாசமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் காதுகளில் கச்சிதமாகப் பொருந்தும் படி சிறப்பான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முழு தோற்றமும் அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாக் நிறத்தில் பிரீமியம் ஸ்டைல் லுக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான எச்.டி ஆடியோ தரம்
இந்த ப்ளூடூத் ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் எச்.டி தரத்தில் பயனர்களுக்கு ஆடியோ அனுபவத்தைச் சிறப்பாக வழங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக இதில் உள்ள பாஸ் மற்றும் ட்ரிப்லி அனுபவம் உண்மையில் மிரட்டலாக உள்ளது. குறிப்பாக எச்.டி தரப் பாடல்கள் மற்றும் படங்களின் அனுபவம் இதில் அட்டகாசமாக உள்ளது.

சவுண்ட் செட்டிங்கை மாற்றினால் டால்பிக்கு நிகர் இந்த Oraimo
நெட்ஃபிலிக்ஸ், மற்றும் அமேசான் பிரைம் இல் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் தொடர்களைப் பார்க்கும் பொழுது உங்கள் சவுண்ட் செட்டிங்கை மூவிக்கு (movie) மாற்றிவிட்டுப் பயன்படுத்தினால் டால்பி தரத்திற்கு இணையான அனுபவத்தை அனுபவிக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள குஷன் இயர்பிட்ஸ்களால் நீண்ட நேரம் எந்த தொந்தரவும் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புளூடூத் வெர்ஷன் 5.0 இணக்கத்துடன் ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்
உண்மையான ஒலி செயல்திறனை உறுதி செய்வதற்காகத் தெளிவான, சீரான ஒலி தரம் மற்றும் மேம்பட்ட வயர்லெஸ் இணைப்பை வழங்குவதற்கு ஒரைமோ ஏர்பட்ஸ் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்திய புளூடூத் வெர்ஷன் 5.0 இணக்கத்துடன் தனது பயனர்களுக்குத் தொந்தரவில்லாத படி தெளிவான அழைப்பு அனுபவத்தையும் இந்த Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் வழங்குகிறது.

24 மணி நேர சார்ஜிங் கேஸ்
இந்த ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸில் 50 எம்ஏஎச் சக்திவாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்கள் தொடர்ச்சியாக 6 மணிநேரத்திற்கு பிளே டைமை தடையின்றி வழங்குகின்றது. மேலும் இதனுடன் வழங்கப்பட்டுள்ள போர்ட்டபிள் சார்ஜிங் கேஸை பயன்படுத்தி தடை இல்லாமல் பயனர்கள் 24 மணி நேரம் சார்ஜ் செய்து இயர்பட்ஸை பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி 100 மணிநேர ஸ்டான்பை சேவையும் வழங்குகிறது.

துல்லியமான அனுபவம்
Oraimo ஏர்பட்ஸ்ப்ளூடூத் வெர்ஷன் 5.0 உடன் இயக்கப்படுகிறது, இதனால் உங்கள் கனெக்ட்டிவிட்டி இணைப்பு விரைவாக நடக்கிறது. இணைப்புகள் மிகவும் நிலையானதாகவும், மிகத் துல்லியமாகவும் பயனர்களுக்குச் சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் அனுபவத்தை வழங்குகின்றது.

பட்ஜெட் விலையில் ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்
அட்டகாசமான தோற்றத்துடன், ஸ்டைலான டிஸைனுடன் இந்த புதிய ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் மிரட்டலான ஆடியோ அனுபவத்தை எச்.டி தரத்தில் வழங்குகின்றது. பட்ஜெட் விலையில் அதிகப்படியான சிறப்பம்சங்களுடன் கிடைக்கும் இந்த ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸின் அசல் விலை ரூ.2,999 மட்டுமே. ஆனால் தற்பொழுது அமேசான் சலுகையில் வெறும் ரூ.2099 என்ற விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகமே இல்லாமல் நம்பி வாங்கலாம்
ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸை முதல் முறையாகப் பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு ஓராய்மோ ஏர்பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதேபோல் மிரட்டலான அனுபவத்தை மிகத் துல்லியமான பாஸ் தரத்தில் கேட்க விரும்பும் பயனர்களுக்கு ஓராய்மோ ஏர்பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் நம்பிக்கையான தேர்வு என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications