வாட்டர் புரூப் உடன் விற்பனைக்கு வரும் ஓரைமோ ஸ்மார்ட் பேண்டு.!
ஹோலி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த ஆண்டு வாட்டர் புரூப் ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட் பேண்டுகளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
ஹோலி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த ஆண்டு வாட்டர் புரூப் ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட் பேண்டுகளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தற்பொழுது ஓரைமோ நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட் பேண்டை அறிமுகம்செய்துள்ளது.

ஓரைமோ டெம்போ 2
ஓரைமோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட் பேண்டிற்கு டெம்போ 2 OFB-20 என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் பேண்டுகள் IP67 சான்றிதழுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்டர் ரெசிஸ்டனட் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளே
0.96 இன்ச் கொண்ட பெரிய ஐபிஎஸ் மல்டி கலர் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய எழுத்துக்களுடன் வருவதனால் பயனரின் கண்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும் மிக எளிதாய் நேரம் பார்த்துக்கொள்ள முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேவைகள்
இத்துடன் இதய துடிப்பு, பூட் ஸ்டேப் போன்று இன்னும் பல சேவைகள் இந்த ஸ்மார்ட் பேண்டில் வழங்கப்பட்டுள்ளது. உங்களின் மொபைல் போனிற்கு வரும் வாட்ஸ் ஆப் மெசேஜ் மற்றும் பேஸ்புக் மெசேஜ்களை உங்களின் பேண்டில் பார்த்துக்கொள்ளலாம்.

விலை
100 எம்.ஏ.எச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளதனால் 20 நாட்கள் வரி நீடித்து உழைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் பேண்டு அமேசான் தளம் மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெறும் ரூ.2,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications