ஆப்டோமா யுஎச்டி65 டிஎல்பி ப்ரஜெக்டர் : விரிவான அலசல்.!

சமீபத்திய பெரும்பாலான மல்டிமீடியா கன்டென்டுகளில் உள்ள இரண்டு மிகமுக்கிய அம்சங்கள் என்றால் 4k ரெபல்யூசன் மற்றும் எச்.டி.ஆர் எனப்படும் ஹை டைனமிக் ரேன்ஞ்.

|

தொலைகாட்சிகளில் 4k ரெசல்யூசன் என்பது முக்கிய அம்சமாக வேகமாக மாறி வரும் நிலையில், 4k ஒளிபரப்பு சேவைகள் அவ்வளவாக இல்லை. எனினும் இது வீட்டு ப்ரஜெக்டர்களுக்கு பொருந்தாது. அதிலும் குறிப்பாக, சோனி எஸ்எக்ஸ்ஆர்டி ப்ரஜெக்டர்கள் தான் ஒரே வீட்டு 4k ப்ரஜெக்டர்கள்.

இது இன்னமும் மாறாமல் தான் இருக்கும். ஏனெனில் யுஎச்டி60ன் அடுத்த வெர்சனான ஆப்டோமாவின் புதிய ப்ரஜெக்டர், எக்ஸ்.பி.ஆர்(eXpanded Pixel Resolution ) எனப்படும் பிக்சல் இடம்மாற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4k இமேஜை உருவாக்குகிறது. இது உண்மையான 4k ரெசல்யூசனாக இல்லாவிட்டாலும், டிஎல்பி ப்ரஜெக்டரில் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.

ஆப்டோமா யுஎச்டி65 டிஎல்பி ப்ரஜெக்டர் : விரிவான அலசல்.!

சமீபத்திய பெரும்பாலான மல்டிமீடியா கன்டென்டுகளில் உள்ள இரண்டு மிகமுக்கிய அம்சங்கள் என்றால் 4k ரெபல்யூசன் மற்றும் எச்.டி.ஆர் எனப்படும் ஹை டைனமிக் ரேன்ஞ். சந்தையில் தொடர்ந்து 4k எச்.டி.ஆர் ப்ளூ ரேக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை இல்லாமல் ஒரு சரியான ப்ரஜெக்டர் இருப்பது ஒரு சவாலானது ஆகும்.

எனவே இந்த புதிய ஆப்டோமா யூஎச்டி65 சவால்களை சந்திக்க தயாராக உள்ளதா? இதோ எங்களது ரிவீயூ ..

 முக்கிய அம்சங்கள்:

முக்கிய அம்சங்கள்:

* டிஸ்ப்ளே டெக்னாலஜி : டிஎல்பி

* ரெசல்யூசன் : யுஎச்டி(3840x2160)

*ப்ரைட்னஸ் : 2200 ஏன்சி லியூமன்ஸ்

*கான்ட்ராஸ்ட் ரேசியோ : டைனமிக் ப்ளேக் உடன் 1,200,000:1 வரை

*லேம்ப் லைப் : டைனமிக்/எகோ/ப்ரைட் 15000/10000/4000(மணி நேரம்)

*த்ரோ ரேசியோ : 1.39 - 2.22(+/- 5%)

*ஜூம் டைப் :1.6× மேனுவல்

*லென்ஸ் ஷிப்ட் : வெர்டிகல் +15%

*ஸ்பீக்கர்(வாட்ஸ்) :2×4w ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

*ஆடியோ : 2×4w ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

*எடை :7.26கிலோ

*அளவு : 19.6'×6'×13'

*ஏஸ்பெக்ட் ரேசியோ : : 16:9 (native), 4:3, Auto, LBX (2160p and 1080p)

*பொறுத்தமான கணிணி :UHD, WQHD, WUXGA, FHD, UXGA, SXGA, WXGA, HD, XGA, SVGA, VGA, Mac

*வீடியோ வகை :480i/p, 576i/p, 720p(50/60Hz), 1080i(50/60Hz), 1080p(24/50/60Hz), 2160p(24/50/60Hz)

* பவர் சப்ளை :AC input 100-240V, 50-60Hz, auto-switching

*உத்திரவாதம் :3 ஆண்டுகள் தயாரிப்பாளர் உத்திரவாதம்

வடிவமைப்பு

வடிவமைப்பு

7.8கிலோ எடை இருப்பதால் யுஎச்டி அதிக எடைகொண்ட ப்ரஜெக்டர் வகையை சேர்ந்தது ஆகும். வெள்ளை நிறத்தில் வளைந்த முனைகளை கொண்ட, பக்கவாட்டில் காற்று வெளியேறும் பகுதி, நடுவில் வைக்கப்பட்டுள்ள லென்ஸ் மற்றும் பின்புறத்தில் 2 எச்.டி.எம்.ஐ ஸ்லாட்கள் உள்ளன. இதில் உள்ள எச்.டி.சி.பி2.2 4k உள்ளீடுகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. இதில் உள்ள யூ.எஸ்.பி போர்ட்கள் யூ.எஸ்.பி அல்லது ஹார்டுடிஸ்க்கில உள்ள 4k வீடியோக்களுக்கு ஒத்துழைக்காது. ஜூம் மற்றும் போகஸ் செய்வது மேனுவலாக மட்டுமே செய்யமுடியும்.

செயல்திறன்

செயல்திறன்

அறைக்கு தகுந்தாற்போல் ப்ரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட் போன்றவற்றை மாற்றி சிறப்பான வெளியீட்டை பெறலாம்.4w ஸ்பீக்கர்கள் சிறப்பாக செயல்படுகின்றன. யூடியூப் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட அனைத்து எச்.டி வகை வீடியோக்களை, 2160p ரெசஸ்யூசனில் பார்க்கமுடியும்.

முடிவு என்ன?

முடிவு என்ன?

ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டுமெனில் யூ.எச்.டி65 ப்ரஜெக்டர் அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் சிறப்பான தரத்தை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் இதுபோன்ற விலையில் உள்ள ப்ரெஜெக்டருக்கு இன்னும் கூடுதலான அம்சங்களை சேர்த்திருக்கலாம். ரிமோட் கண்ட்ரோல் மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது.இதேபோன்ற அம்சங்களை கொண்ட ப்ரஜெக்டர்கள் இதை விட 5 மடங்கு குறைவான விலையில் கிடைக்கின்றன.

எச்டி தொலைக்காட்சி

எச்டி தொலைக்காட்சி

எச்டி தொலைக்காட்சி மற்றும் அதிக திறன் கொண்ட விளையாட்டு சேனல்களுக்கான ப்ரஜெக்டர் வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு, யுஎச்டி65 சிறப்பான ஒன்று. "நல்ல பொருட்கள் நல்ல விலையில் கிடைக்கும்" என்பதற்கேற்ப இந்த ஆப்டோமா யுஎச்டி65, இந்தியாவில் ரூ4,25,000 என்ற விலையில் கிடைக்கிறது

Best Mobiles in India

English summary
Optoma UHD65 DLP Projector Review: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X