ஆப்டோமா யூஹெச்டி50, 51 மற்றும் 51ஏ 4கே ப்ரொஜெக்டர்கள் அறிமுகம்.!

இந்தியாவில் யூஹெச்டி51ஏ, யூஹெச்டி51 மற்றும் யூஹெச்டி50 உள்ளிட்ட 4கே ப்ரொஜெக்டர்களின் அறிமுகத்தை குறித்து ஆக்டோமா நிறுவனம் அறிவித்துள்ளது.

|

அலெக்ஸா உடன் ஒருங்கிணைந்த ப்ரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ள ஆப்டோமா நிறுவனம், வீட்டு பொழுதுபோக்கை அடுத்த நிலைக்கு அழைத்து சென்றுள்ளது.

ஆப்டோமா யூஹெச்டி50, 51 மற்றும் 51ஏ 4கே ப்ரொஜெக்டர்கள் அறிமுகம்.!

இந்தியாவில் யூஹெச்டி51ஏ, யூஹெச்டி51 மற்றும் யூஹெச்டி50 உள்ளிட்ட 4கே ப்ரொஜெக்டர்களின் அறிமுகத்தை குறித்து ஆக்டோமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் உட்படும் யூஹெச்டி51ஏ, உலகிலேயே அலெக்ஸாவை ஆதரிக்கும் முதல் ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சிஇஎஸ் 2018 டெக் ஷோ-வில், இந்த ப்ரொஜெக்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

யூஹெச்டி51ஏ இல் உள்கட்டமைப்பு உடன் கூடிய மீடியா பிளேயர், ஒரு ஜோடி ஹெச்டிஎம்ஐ 2.0 உள்ளீடு போர்ட்கள் உடன் கூடிய ஹெச்டிசிபி 2.2 ஆதரவு போன்ற அம்சங்கள் உள்ளன. இதன்மூலம் நவீன 4கே யூஹெச்டி வீடியோ ப்ளேபேக் சாதனங்கள் மற்றும் 60 ஹெச்இசட் புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட ஹெச்டிஆர் உடன் கூடிய கேம் கன்சோல்கள் ஆகியவை உடன் இந்த ப்ரொஜெக்டர் போட்டியிட தகுதியைக் கொண்டதாக உள்ளது.

ஆப்டோமா யூஹெச்டி50, 51 மற்றும் 51ஏ 4கே ப்ரொஜெக்டர்கள் அறிமுகம்.!

ஏனைய இரண்டு ப்ரொஜெக்டர்களும், அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆதரிப்பு இல்லை. டெக்சஸ் உபகரணங்களில் இருந்து நவீன 4கே யூஹெச்டி டிஎல்பி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த 4கே ப்ரொஜெக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பம் மூலம் சாதனத்தால் 8.3 மில்லியன் தனிப்பட்ட பிக்ஸல்களை உருவாக்க முடிகிறது.

இந்தப் புதிய ஆப்டோமா ப்ரொஜெக்டர்களில், தெள்ளத் தெளிவான படங்களைப் பெற உதவும் 4கே துல்லியமான லென்ஸ்கள் காணப்படுகின்றன. 8.3 மில்லியனுக்கும் அதிகமான ஆன்-ஸ்கிரீன் பிக்ஸல்கள் உள்ளன. இந்தப் புதிய ப்ரொஜெக்டர்களின் சீரியஸில், 4கே யூஹெச்டி பெற தேவையான சிடிஏ (நுகர்வோர் தொழில்நுட்ப இணைப்பு) பெற்றிருப்பதோடு, ஹெச்டிஆர்-க்கு தகுந்த டிஸ்ப்ளே தரத்துடன் ஒத்து போகிறது. இந்தப் புதிய தயாரிப்புகளில், ஆர்ஜிபி கலர் வீல், 500:000:1 கன்ட்ராஸ்ட் விகிதம் மற்றும் ரெக்.2020/டிசிஐ-பி3 விரிந்த நிற வரம்பு உடன் பொருந்தக் கூடிய தன்மையைக் கொண்ட ஹெச்டிஆர்10 ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த புதிய ப்ரொஜெக்டர்கள், செங்குத்தான லென்ஸ் ஷிஃப்ட் மூலம் 300 இன்ச் வரை வெளியிடும் திறனைப் பெற்றுள்ளதோடு, எளிமையான நிறுவுதலுக்கான 1.3எக்ஸ் ஸூம் காணப்படுகிறது. இவற்றை பயன்படுத்த சிறப்பாக இருப்பதோடு, சுமார் 5.34 கிலோ எடையைக் கொண்டுள்ளது. ஒலி அளவு 25டிபி வரை காணப்படுகிறது. இதன் லேம்ப் லைப் 15 ஆயிரம் மணிநேரம் வரை உள்ளது.

விலையைப் பொறுத்த வரை, யூஹெச்டி50, யூஹெச்டி51 மற்றும் யூஹெச்டி51ஏ ஆகியவை முறையே, ரூ.250,000, ரூ.265,000 மற்றும் ரூ.285,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆப்டோமா யூஹெச்டி50, 51 மற்றும் 51ஏ 4கே ப்ரொஜெக்டர்கள் அறிமுகம்.!

இந்த அறிமுகத்தை குறித்து ஆப்டோமா ஏபிஏசி-யின் துணைத் தலைவர் கார்டன் வூ கூறுகையில், "கடந்த காலத்தில் ஆக்டோமா யூஹெச்டி65 மற்றும் யூஹெச்இசட்65 ஆகிய 4கே ப்ரொஜெக்டர்களின் அறிமுகத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றி தொடரும் நிலையில், மீண்டும் ஒரு முறை தொழில்துறையிலேயே மிகவும் புதுமையான மற்றும் நவீன தன்மையைக் கொண்ட 4கே தொழில்நுட்பத்தை கொண்ட யூஹெச்டி51ஏ, யூஹெச்டி51 மற்றும் யூஹெச்டி50 ஆகிய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் கைகளுக்கு ஆப்டோமா நிறுவனம் அளிக்கிறது.

அல்ட்ரா உயர் வரையறை கொண்ட ஹோம் சினிமா சந்தையில் முன்னணி வகிக்கும் நிலையில், நம்ப முடியாத விலை நிர்ணயத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சினிமாவை தரத்துடன் பார்க்கும் அனுபவத்தை தொடர்ந்து அளிக்கக் கூடிய புதிய தலைமுறையைச் சேர்ந்த 4கே பகுப்பாய்வு ப்ரொஜெக்டர்களை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

Best Mobiles in India

English summary
Optoma UHD51A, UHD51 and UHD50 4K projectors launched Price, specs and more ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X