தலைவன் வேற ரகம்.. AMOLED டிஸ்பிளே.. 2GB ரேம்.. 32GB மெமரி.. eSIM சப்போர்ட்.. 7 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களும் மூக்கில் விரல்வைக்கும்படியான பீச்சர்களுடன் ஓப்போ வாட்ச் எக்ஸ்2 மினி (OPPO Watch X2 Mini) மாடல் வெளியாகி இருக்கிறது. 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஈசிம் கனெக்டிவிட்டி, 7 நாட்கள் பேக்கப் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட், என்எப்சி பேமெண்ட்ஸ், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த ஓப்போ வாட்ச் எக்ஸ்2 மினி மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் வெளியாக இருக்கும் இந்த ஓப்போ வாட்ச் எக்ஸ்2 மினி மாடலின் விலை ரூ.21,180 பட்ஜெட்டில் தொடங்குகிறது. ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகரான விலையில் எப்படி வாங்குவது? என்ற கேள்வி எழுவது புரிகிறது. ஆனால், இதில் கிடைக்கும் பீச்சர்களை பார்த்தால், அதுவும் ஸ்மார்ட்போனுக்கு நிகராகவே இருக்கும். ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.

ஓப்போ வாட்ச் எக்ஸ்2 மினி அம்சங்கள் (OPPO Watch X2 Mini Specifications): சில்வர் (Silver), பிளாக் (Black) மற்றும் கோல்டு (Gold) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இதில் கோல்டு வேரியண்ட்டில் 18K கோல்டு பிளேடேட் கிரவுண் கிடைக்கிறது. அதேபோல இதில் பிரீமியம் லெதர் ஸ்ட்ராப் கிடைக்கிறது.
பிளாக் மற்றும் சில்வரில் ஃப்ளோரோரப்பர் (Fluororubber) ஸ்ட்ராப் கிடைக்கிறது. 1.32 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 352 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனை போலவே பிரத்யேகமாக சிப்செட் மற்றும் ஓஎஸ் கொண்டிருக்கிறது.
ஆகவே, கலர்ஓஎஸ் வாட்ச் 7.0 (ColorOS Watch 7.0) கொண்ட ஸ்னாப்டிராகன் டபுள்யூ5 (Snapdragon W5) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, மியூசிக் ஸ்டோரேஜ் எதிர்பார்க்கலாம். இந்த ஓப்போ வாட்ச் எக்ஸ்2 மினி மாடலில் 345mAh பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. ஃபுல் சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் போதும்.
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், ஸ்டாண்ட்பை மோடில் 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஈசிம், ப்ளூடூத் காலிங் மோடில் 1.5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். நார்மல் மோடில் 2.5 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஈசிம் மாடலாக இருப்பதால், கொஞ்சம் குறைவாக பேக்கப் கிடைக்கிறது. ஹார்ட் ரேட் மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் கிடைக்கிறது.
ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங், ஸ்லீப் லெவல் டிராக்கிங் சப்போர்ட் உள்ளது. ஆட்டோ டிடெக்சன் சப்போர்ட் கொண்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. ஆகவே, ரன்னிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற குறிப்பிட்ட ஆக்டிவிட்டிகளின் போது ஆட்டோமெட்டிக்காக மோட் செலக்ட் செய்யப்பட்டுவிடும். இதுபோக 100+ ஸ்போர்ட்ஸ் மோட்களையும் இந்த ஓப்போ மாடல் கொடுக்கிறது.
ப்ளூடூத் காலிக் சப்போர்ட் உள்ளது. இதுபோக ஈசிம் சப்போர்ட் கிடைப்பதால் அதற்காக கால் மற்றும் எஸ்எம்எஸ் சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 2 (Wi-Fi 2), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. டீப்சீக் (Deepseek) மற்றும் சியோபூ அசிஸ்டன்ட் (Xiaobu Assistant) சப்போர்ட் கிடைக்கிறது.
கிரவுண் கன்ட்ரோல் மட்டுமல்லாமல், கெஸ்ச்சர் கன்ட்ரோல் கிடைக்கிறது. 5ATM ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஸ்மார்ட்வாட்ச்சின் கோல்டு மாடலின் விலை ரூ.24,609ஆகவும், சில்வர் மற்றும் பிளாக் மாடல்களில் விலை ரூ.21,083ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 16ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications