அழகான தோற்றத்துடன் மிரட்டலான அம்சங்களுடன் Oppo Watch அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம் பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்போ வாட்சின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒப்போ வாட்ச்

ஒப்போ வாட்ச்

ஒப்போ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனம் ஒப்போ வாட்ச் என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஒப்போ வாட்ச் டூயல் கர்வுடு AMOLED டிஸ்பிளே மற்றும் பிற கூடுதல் அம்சங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ வாட்ச் விவரக்குறிப்புகள்

ஒப்போ வாட்ச் விவரக்குறிப்புகள்

41 மிமீ வேரியண்ட் ஸ்மார்ட் வாட்ச் மாடல் 1.6' இன்ச் கொண்ட 320x360 பிக்சல்கள் தீர்மானம் உடைய AMOLED டிஸ்ப்ளேயாக வருகிறது. இதன் 46 மிமீ வேரியண்ட் மாடல் 1.91' இன்ச் கொண்ட 402x476 பிக்சல்கள் தீர்மானம் உடைய கர்வுடு AMOLED டிஸ்பிளேயுடன் வருகிறது. இவை இரண்டுமே 326ppi பிக்சல் அடர்த்தி கொண்டது.புதிய ஒப்போ வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் 2500 உடன் வருகிறது.

புதிய ஒப்போ வாட்ச் சாதனம்

அதேபோல், ஒப்போ நிறுவனத்தின் இந்த புதிய ஒப்போ வாட்ச் சாதனம், அப்பல்லோ 3 செயலியுடன் கூடிய 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் பரந்த அளவிலான உடற்பயிற்சி மற்றும் ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளைக் கண்காணிக்க அனுமதிக்கிறது. இது இன்டோர் மற்றும் அவுட்டோர் ரன்னிங், அவுட்டோர் வாக்கிங், அவுட்டோர் சைக்கிலிங், நீச்சல் மற்றும் பலவற்றைக் கண்காணிக்க அனுமதிக்கிறது.

வாட்டர் ரெசிஸ்டன்ஸ்

வாட்டர் ரெசிஸ்டன்ஸ்

ஒப்போ வாட்ச் 46 மிமீ வேரியண்ட் மாடல் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அதேபோல், இதன் 41 மிமீ வேரியண்ட் மாடல் 3ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. தூக்கத்தைக் கண்காணிப்பதற்கான ஸ்லீப் மோடு அம்சமும் மற்றும் 24 × 7 இதயத் துடிப்பு கண்காணிப்பையும் இந்த ஒப்போ வாட்ச் கொண்டுள்ளது. இதில் 430 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இது 21 நாட்களுக்குப் பயன்முறையை வழங்குகிறது.

ஒப்போ வாட்ச் விலை

ஒப்போ வாட்ச் விலை

ஒப்போ ஸ்மார்ட்போன்கள் போல ஒப்போ வாட்ச்சிலும் VOOC ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்வாட்சை வெறும் 15 நிமிடங்களில் 0 முதல் 46 சதவீதம் வரை மிக வேகமாக சார்ஜ் செய்து முடிகிறது. ஒப்போ வாட்ச் 46 மிமீ வேரியண்ட் ரூ .19,990 என்ற விலையிலும், 41 மிமீ வேரியண்ட் மாடலின் விலை ரூ .14,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ வாட்ச் ஆகஸ்ட் 10 முதல் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் முன்னணி சில்லறை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Oppo Watch With Dual-Curved AMOLED Display Got Launched In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X