இது வேற ரகம் போலயே.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. 10 நாட்கள் பேட்டரி.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் ஸ்லிம் மாடலான ஓப்போ வாட்ச் எஸ் (OPPO Watch S) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது. வெறும் 8.9 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் மட்டுமல்லாமல், 35 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த பாடியில் அமோலெட் டிஸ்பிளே, 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட், 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 339mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ வாட்ச் எஸ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9), ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Find X9 Pro), ஓப்போ பேட் 5 (OPPO Pad 5) ஆகிய மாடல்கள் ஒரே நாளில் வெளியாகின. அதோடு பிரீமியம் ஹெல்த் பீச்சர்கள் மற்றும் பில்ட் குவாலிட்டியுடன் இந்த ஓப்போ வாட்ச் எஸ் மாடல் வெளியாகியது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியில் பிரீமியம் லுக் கொடுக்கிறது.

பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் ஏஐ ஸ்போர்ட்ஸ் கோச் (AI Sports Coach), ஜிபிஎஸ் லோகேஷன் அகியூரசி (GPS Location Accuracy) மற்றும் ஒட்டுமொத்த ஹெல்த் டிராக்கர்கள் மற்றும் மானிட்டர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஃபேட் பர்னிங் அனாலைசிஸ் (Fat-burning Analysis) முதல் ஈச்ஜி, ஹாட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல், டெம்ப்ரேச்சர் வரையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் கிடைக்கிறது.
ஓப்போ வாட்ச் எஸ் அம்சங்கள் (OPPO Watch S Specifications): இந்த ஓப்போ மாடலில் 1.46 இன்ச் (464 x 464 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 317 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. கலர்ஓஎஸ் வாட்ச் 7.1 (ColorOS Watch 7.1) கொண்ட பிஇஎஸ்2800பிபி (BES2800BP) சிப்செட் கிடைக்கிறது.
பிரத்யேக சிப்செட் கிடைப்பதால், பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். இதுபோக 4 ஜிபி்க்கான மெமரி கிடைக்கிறது. இதில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் உள்ளிட்ட 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன. இதை டிடெக்ட் செய்துகொள்ள ஆக்டிவிட்டி டிராக்கர் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் கிட்டத்தட்ட பெரும்பாலான சென்சார்கள் கிடைக்கின்றன.

ஆகவே, ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் சென்சார் (Blood Oxygen Sensor) மற்றும் ஈசிஜி சென்சார் (ECG Sensor) கிடைக்கிறது. மேலும், விரஸ்ட் டெப்ரேச்சர் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ஜியோமேக்னடிக் சென்சார் கிடைக்கிறது. இதுபோக கைரோ சென்சாரும், ஆக்ஸிலரேஷன் சென்சாரும் கிடைக்கிறது.
இந்த சென்சார்கள் மூலம் பிளட் சுகர் லெவல் மானிட்டரிங், ஸ்கின் டெம்ப்ரேச்சர் மானிட்டரிங், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங், ஹார்ட் ரேட் மானிட்டரிங், ஸ்லீப் டிராக்கிங், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் போன்ற ஒட்டுமொத்த ஹெல்த் மானிட்டர்களும் கிடைக்கின்றன. மேலும், ஃபால் டிடெக்சன் (Fall Detection) கிடைக்கிறது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
இதுபோக IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 339mAh பேட்டரி கிடைக்கிறது. வைப்ரன்ட் கிரீன் (Vibrant Green), ரிதமிக் சில்வர் (Rhythmic Silver) மற்றும் ரேசிங் பிளாக் (Racing Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இந்த ஓப்போ வாட்ச் எஸ் மாடலின் விலை ரூ.16,031ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் கலர்கள் கிடைக்கிறது. வைப்ரன்ட் கிரீன் கலர் வேரியண்ட்டானது, ரூ.18,501 விலைக்கு கிடைக்க இருக்கிறது. அக்டோபர் 22ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. மற்ற மார்கெட்டிகளில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








