அடேங்கப்பா.. Oppo Watch 3 இல் இப்படியொரு சிறப்பம்சம் இருக்குதா? வேறலெவல்.!

|

ஸ்மார்ட் வாட்ச் பிரியரா நீங்கள்? அப்போ, இந்த Oppo Watch 3 சீரிஸ் லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் பற்றிய தகவல்களை நீங்கக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம் Qualcomm Snapdragon W5 Gen 1 என்ற சிங்கிள் சிப் உடன் இயங்குகிறது. இந்த சிப்செட் உடன் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Oppo Watch 3 மற்றும் Oppo Watch 3 Pro அறிமுகம்

Oppo Watch 3 மற்றும் Oppo Watch 3 Pro அறிமுகம்

ஸ்மார்ட் வாட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை இந்த ஒப்போ வாட்ச் 3 சீரிஸ் மாடல் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை Oppo நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த Oppo Watch 3 வரிசையில் Oppo Watch 3 மற்றும் Oppo Watch 3 Pro என்ற 2 மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 சிப்செட் உடன் வருகிறது.

1GB RAM உடன் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸா?

1GB RAM உடன் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸா?

இந்த ஸ்மார்ட் வாட்ச் டிவைஸில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் 1GB RAM உடன் வருகிறது. இதன் விலை பற்றிப் பார்க்கையில், ஒப்போ வாட்ச் 3 டிவைஸ் CNY 1,599 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 18,800 ஆகும். இது பிளாட்டினம் பிளாக் விட்டான் ஸ்ட்ராப் மாடலின் விலை என்பது கவனிக்கத்தக்கது.

SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

Oppo Watch 3 Pro மாடலின் விலை என்ன?

Oppo Watch 3 Pro மாடலின் விலை என்ன?

அதேபோல், இதன் ஃபெதர் கோல்டு லெதர் ஸ்ட்ராப் மாடலின் விலை CNY 1,699 ஆகும். இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 20,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், Oppo Watch 3 Pro டிவைஸின் பிளாட்டினம் பிளாக் விட்டான் ஸ்ட்ராப் விலை CNY 1,999 ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 23,500 ஆகும். டெசர்ட் பிரவுன் லெதர் ஸ்ட்ராப் மாடலின் விலை CNY 2,099 ஆகும். இந்திய மதிப்பில் இதில் தோராயமாக ரூ. 24,700 ஆகும்.

Oppo Watch 3 Pro சிறப்பம்சம்

Oppo Watch 3 Pro சிறப்பம்சம்

இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளும் தற்போது சீனாவில் உள்ள Oppo இன் ஆன்லைன் ஸ்டோர் வழியாக ப்ரீ-புக்கிங் செய்யக் கிடைக்கிறது. இவை, ஆகஸ்ட் 19 முதல் ஷிப்பிங் செய்யப்படும் என்று ஒப்போ தெரிவித்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பற்றிப் பார்க்கையில், Oppo Watch 3 Pro ஆனது 378×496 பிக்சல்கள் உடன் 1.91' இன்ச் LTPO கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Qualcomm Snapdragon W5 Gen 1 மூலம் இயக்கப்படுகிறது. இது 1GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Oppo Watch 3 சிறப்பம்சம்

Oppo Watch 3 சிறப்பம்சம்

Oppo Watch 3 ஆனது 372×430 பிக்சல்கள் உடன் 1.75-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மற்ற அம்சங்கள் எல்லாம் அப்படியே ப்ரோ மாடலை போலவே உள்ளது. ஆனால், இது 400எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. மறுபுறம் ப்ரோ மாடல் 550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் இரண்டு 4 முதல் 5 நாள் வரை நீடிக்கும் முழு பயன்பாட்டு பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. 10 நிமிட சார்ஜ் நேரம் 24 மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது.

அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

இந்தியாவில் இந்த ஸ்மார்ட் வாட்ச் எப்போது கிடைக்கும்?

இந்தியாவில் இந்த ஸ்மார்ட் வாட்ச் எப்போது கிடைக்கும்?

முழுமையாக சார்ஜ் செய்ய இவை 65 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இவை 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவலை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், ஒப்போ நிறுவனத்தின் முக்கியமான விற்பனை சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்பதனால், இந்த ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ்கள் வெகு விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Watch 3 and Watch 3 Pro Announced With Snapdragon W5 Gen 1 SoC Equipped With 1GB RAM

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X