Home
Gadgets

OPPO ரசிகர்களை கையில பிடிக்க முடியாதே.. ஒரே நாளில் 5 அறிமுகம்.. 2 போன், 1 பட்ஸ், 1 வாட்ச், 1 டேப்லெட்!

நேற்று வரையிலாக இந்தியாவில் உள்ள ஒப்போ (OPPO) ரசிகர்கள், ஒப்போ நிறுவனத்திடம் இருந்து அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களான ஒப்போ ரெனோ 14 சீரீஸ் (ஒப்போ ரெனோ 14 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி) மாடல்களை மட்டுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர்.

கடந்த 2025 மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே உலகளாவிய வெளியீட்டை காணும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே, இந்த ஸ்மார்ட்போன்கள் தனியாக அறிமுகம் செய்யப்படாது; மாறாக மேலும் சில புதிய ஒப்போ தயாரிப்புகளுடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

OPPO: ஒரே நாளில் 5 அறிமுகம்.. 2 போன், 1 பட்ஸ், 1 வாட்ச், 1 டேப்லெட்!

ஒப்போ ரெனோ 14 சீரீஸ் (Oppo Reno 14 Series) ஸ்மார்ட்போன்களுடன் - ஒப்போவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆக ஒப்போ வாட்ச் எக்ஸ்2 மினி (Oppo Watch X2 Mini), ஒப்போவின் புதிய இயர்பட்ஸ் ஆக ஒப்போ என்கோ பட்ஸ் 3 ( Oppo Enco Buds 3) மற்றும் ஒப்போவின் புதிய டேப்லெட் ஆக ஒப்போ பேட் எஸ்இ (Oppo Pad SE) ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளது

எந்தவொரு சாதனத்திற்கும் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. முந்தைய கசிவின் படி, ஒப்போ ரெனோ 14 தொடர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியாவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OPPO: ஒரே நாளில் 5 அறிமுகம்.. 2 போன், 1 பட்ஸ், 1 வாட்ச், 1 டேப்லெட்!

இருப்பினும் ஒப்போவின் இந்த புதிய தயாரிப்புகள் சரியாக எப்போது அறிமுகமும் என்கிற வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒப்போ ரெனோ 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வேரியண்ட்கள் 2025 ஜூலை முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 14 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.59-இன்ச் பிளாட் எல்டிபிஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் கூடிய மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதன்கீழ் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடன் கூடிய 50எம்பி சோனி ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3.5x ஜூம் கொண்ட 50எம்பி ஜேஎன்5 பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது.

OPPO: ஒரே நாளில் 5 அறிமுகம்.. 2 போன், 1 பட்ஸ், 1 வாட்ச், 1 டேப்லெட்!

பேட்டரியை பொறுத்தவரை இது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. குளிரூட்டலுக்காக இது நானோ ஐஸ் கிரிஸ்டல் ஹீட் சிங்க்கை பயன்படுத்துகிறது, இது நிலையான கிராஃபைட் ஷீட்களை விட மூன்று மடங்கு சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி66 / ஐபி68 / ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெல்வெட்-டெக்ஸ்ச்சர்டு கிளாஸ் பேக் உடன் கூடியமெட்டல் ஃபிரேம்-ஐ பயன்படுத்துகிறது. இது எடையில் 187 கிராமும் அளவீட்டில் 7.32 மிமீ தடிமனும் உள்ளது

ஒப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.83-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது டைமன்சிட்டி 8450 சிப்பால் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. இது 6200mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo to launch Oppo Watch X2 Mini Oppo Enco Buds 3 Oppo Pad SE Along With Reno 14 Series Globally
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X