ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச்! 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு!

|

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில், கணக்கில்லாத பல வகையான ஸ்மார்ட் வாட்ச்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன, இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்களிலேயே மிகவும் சிறப்பான ஸ்மார்ட் வாட்ச் என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் தான் கூறப்படுகிறது. தற்பொழுது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சிற்கு போட்டியாக ஓப்போ நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

 ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சில் பிரமித்துப் பேசப்பட்ட 'அந்த' அம்சம்

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சில் பிரமித்துப் பேசப்பட்ட 'அந்த' அம்சம்

ஓப்போ அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட் வாட்ச் பார்ப்பதற்கு அப்படியே ஆப்பிள் இன் ஸ்மார்ட் வாட்ச் போன்று இருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டாலும், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் பிரமித்துப் பேசப்பட்ட 'அந்த' ஒரு சேவையையும் ஓப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்சில் களமிறக்கத் தயாராகிவிட்டது. ஆப்பிள் வாட்ச் சிறந்த ஸ்மார்ட்வாட்சாக மாறியதற்கு, அதன் தோற்றம் மட்டும் காரணமல்ல, அதன் தனித்துவமான அம்சங்களும் ஒரு முக்கிய காரணம்.

ஆப்பிள் நிறுவனத்தை விட ஒரு படி மேல் சென்ற ஓப்போ

ஆப்பிள் நிறுவனத்தை விட ஒரு படி மேல் சென்ற ஓப்போ

இப்போது அணியக்கூடிய பிற சாதன தயாரிப்பாளர்களும், ஆப்பிள் நிறுவனம் சென்ற அதே ரயிலில் குதித்து பயணம் செய்ய துவங்கியுள்ளன, மேலும் இந்த முயற்சியில் பல நிறுவனங்கள் இன்னும் சரியான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், ஓப்போ நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தை விட ஒரு படி மேல் எடுப்பது போல் தெரிகிறது. ஓப்போ நிறுவனம், அப்பிளின் முக்கிய அம்சத்தை மட்டுமல்லாமல், அதன் சர்ச்சைக்குரிய தோற்றத்தையும் பிரதிபலிக்கிறது.

புலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோபுலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ

ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்

ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்

வெய்போவில் நீக்கப்பட்ட கசிவின் படி, ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மெதுவாக வளர்ந்து வரும் அணியக்கூடிய சேவை பட்டியலில் உள்ள எலக்ட்ரோ கார்டியோகிராம் அம்சத்தை அதன் ஸ்மார்ட் வாட்சில் சேர்த்துள்ளது. எலக்ட்ரோ கார்டியோகிராம் அல்லது ஈ.சி.ஜி செயல்பாட்டுடன் சேரும், இவை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (atrial fibrillation) ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படும் அம்சமாகும்.

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அல்லது ஏபிப்(AFib)

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அல்லது ஏபிப்(AFib)

இந்த நாட்களில் அணியக்கூடி ஸ்மார்ட் வாட்ச்களில் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அல்லது ஏபிப்(AFib) ஒரு முக்கிய பரபரப்பான அம்சமாக மாறிவிட்டது. குறிப்பாக ஆப்பிள் வாட்சின் இந்த சிறப்பம்சம் பல உயிர் காக்கும் நன்மைகளை வழங்கியதால் அதன் விற்பனையை வெள்ளமாக மாறியது. அன்றிலிருந்து, பல நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை இணைக்கத் தொடங்கிவிட்டனர். ஓப்போ அதன் அடுத்த ஸ்மார்ட்வாட்சில் இந்த அம்சத்தை களமிறக்குகிறது.

Xiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.!Xiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.!

ஆப்பிள் வாட்சின் வெற்றி

ஆப்பிள் வாட்சின் வெற்றி

ஆப்பிள் வாட்சின் வெற்றி வெறுமனே அதன் அம்சங்களின் தொகுப்பால் உருவானதல்ல, அதைச் சுற்றியுள்ள சேவைகள் மற்றும் கூட்டாளர்களின் சுற்றுச்சூழல் அமைப்பு காரணமாகத் தான் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்போ ஸ்மார்ட் வாட்சில் ஈ.சி.ஜி-யுடன் சதுர அமைப்பு

ஓப்போ ஸ்மார்ட் வாட்சில் ஈ.சி.ஜி-யுடன் சதுர அமைப்பு

ஓப்போ அதன் ஸ்மார்ட் வாட்சில் சதுர அமைப்புடன் ஈ.சி.ஜி சேவையை முதன்முதலில் ஒப்புதல் பெறுவதற்கான சவாலையும் எதிர்கொண்டுள்ளது, இது அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடியதில்லை என்றாலும், ஒப்போ தற்பொழுது ஆப்பிள் உடன் நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Smart Watch in direct competition with Apple Smart Watch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X