ஸ்மார்ட்டிவி வாங்க ஐடியா இருக்கா?- பாப்-அப் கேமராவோடு அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்டிவி- விலை விவரங்கள்!

|

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1 மற்றும் ஸ்மார்ட் டிவி ஆர் 1 ஆகியவற்றை ஒப்போவின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1 மாடல் பிரீமியம் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ப்ளோட்டிங் வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் ஸ்மார்ட் டிவி மாடல்கள்

முதல் ஸ்மார்ட் டிவி மாடல்கள்

ஒப்போ நிறுவனம் முதல் ஸ்மார்ட் டிவி மாடல்களாக இரண்டு டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அது ஒரு மாடல் 65 இன்ச் மட்டும் மற்றொன்று 55 இன்ச், 65 இன்ச் என்ற அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒப்போ டிவியின் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று வீடியோ சாட்டிங்களுக்கு பாப் அப் கேமரா அம்சம் இருக்கிறது.

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1, ஸ்மார்ட் டிவி ஆர் 1 விலை

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1, ஸ்மார்ட் டிவி ஆர் 1 விலை

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1 இன் விலை சிஎன்ஒய் 7,999 (தோராயமாக ரூ.87,800). ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர் 1 55 இன்ச் வேரியண்டின் விலை சிஎன்ஒய் 3,299 (தோராயமாக ரூ.36,200) ஆகவும் 65 இன்ச் வேரியண்டில் விலை சிஎன்ஒய் 4,299 (தோராயமாக ரூ.47,200) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய ஸ்மார்ட் டிவிகள் தற்போது சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. இருப்பினும், ஒப்போ ஸ்மார்ட் டிவி மாடல்களை உலக சந்தையில் அறிமுகம் செய்வது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1 அம்சங்கள்

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1 அம்சங்கள்

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1 65 அங்குல மாடல் 4 கே (3,840 x 2,160 பிக்சல்கள்) கியூஎல்இடி குவாண்டம் டாட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதத்தை கொண்டுள்ளது. குவாட் கோர் மீடியாடெக் MT9950 SoC, 8.5ஜிபி ரேம் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் மொத்தம் 18 ஸ்பீக்கர்கள் உள்ளது. இதில் 25 வாட்ஸ் ஸ்பீக்கர், 85 வாட்ஸ் அவுட்புட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளடக்கும்.

பிளிப்கார்ட்டில் 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை- காரணம் இதுதான்!பிளிப்கார்ட்டில் 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை- காரணம் இதுதான்!

128 ஜிபி உள் சேமிப்பு

128 ஜிபி உள் சேமிப்பு

ஒப்போ ஸ்மார்ட் டிவி எஸ் 1 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. 3 டி போன்ற காட்சி அனுபவத்தை வழங்க 1.86 மிமீ டிஸ்ப்ளேவை முன்னோக்கி விரிவுப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியில் முழு ஹெச்டி 1080 பிக்சல் பாப் அப் கேமரா அடக்கம். அதோடு வைபை6, இரண்டு யூஎஸ்பி 3.0, ப்ளுடூத் வாய்ஸ் ரிமோட் உள்ளட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளது.

ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர் 1 அம்சங்கள்

ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர் 1 அம்சங்கள்

ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர் 1 55 மற்றும் 65 இன்ச் என இரண்டு வேரியண்ட் விருப்பங்களில் வருகிறது. இரண்டுமே 4 கே (3,840x2,160 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகதத்துடன் வருகின்றன.

32 ஜிபி உள்சேமிப்பு வசதி

32 ஜிபி உள்சேமிப்பு வசதி

வீடியோ சாட்கள் மேற்கொள்வதற்கு 1080 பிக்சல் ஹெச்டி வெளிப்புற கேமரா, 32 ஜிபி உள்சேமிப்பு, 20 வாட்ஸ் அவுட்புட் வழங்கும் இரண்டு யூனிட்கள் உள்ளது. இதிலும் டால்பி ஆடியோ ஆதரவை வழங்கும் அம்சம் உள்ளது. வைபை 6, இரண்டு யூஎஸ்பி 2.0, ப்ளுடூத் வாய்ஸ் ரிமோட் உள்ளட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Smart TV S1, R1 Launched with Pop-up Camera for Video Chats

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X