Home
Gadgets

மே 6: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒப்போ ஸ்மார்ட் டிவி.!

ஒப்போ நிறுவனம் வரும் மே மாதம் 6-ம் தேதி தனது புதிய ஒப்போ ஸ்மார்ட் டிவி மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9 என்ற அழைக்கப்படும் இந்த சாதனங்கள் 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் அளவுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9

ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9

அதபோல் ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9 மாடல்கள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், MEMC தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன புதிய ஒப்போ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்

ஒப்போ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளுடன் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதி மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களுடன் இந்த ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சில தகவல்கள் ஆன்லைன் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ கே9 5ஜி

ஒப்போ கே9 5ஜி

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.43-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட் வசதி

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

65 வாட்  rapid சார்ஜிங் ஆதரவும்

இந்த ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனில் 2100 எம்ஏஎச் டூயல்-செல்-பேட்டரி வசதி மற்றும் 65 வாட் rapid சார்ஜிங் ஆதரவும்உள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
OPPO Smart TV K9 May Launching Soon in China: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X