Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்குற ரேட்.. 9340mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. 6GB ரேம்.. எந்த டேப்லெட்?

இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் 11 இன்ச் ஐ-கேர் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 9340mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் ஓப்போ பேட் எஸ்இ (OPPO Pad SE) டேப்லெட் வெளியாக இருக்கிறது. ஓப்போ ரெனோ 14 சீரிஸ் (OPPO Reno14 Series) வெளியாகும் அதே தேதியில் இந்த ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி இருப்பதால் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஜூலை 3ஆம் தேதி ஓப்போ ரெனோ12 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. ஓப்போ ரெனோ14 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி மாடல்கள் இதில் வெளியாகின்றன. இப்போது, கூடுதலாக பட்ஜெட் விலை மாடலாக ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட்டும் அதே தேதியில் வெளியாகும் என்று ஓப்போ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

வீட்டுக்கு 1 வாங்குற ரேட்.. 9340mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே டேப்!

இந்த டேப்லெட்டில் 9340mAh பேட்டரி, ஐ-கேர் டிஸ்பிளே மற்றும் 36 மாதங்களுக்கான ப்யூயென்சி புரொடெக்சன் கிடைக்கும் என்பதையும் ஓப்போ நிறுவனம், உறுதி செய்துள்ளது. அதோடு ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய 2 கலர்களில் வெளியாக இருப்பதையும் உறுதி செய்துள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருக்கின்றன. குளோபல் வேரியண்ட்டின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ பேட் எஸ்இ அம்சங்கள் (OPPO Pad SE Specifications): இந்த டேப்லெட்டில் 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 207 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இதுபோக பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

இதுவொரு ஐ-கேர் டிஸ்பிளே மாடலாக இருப்பதால், டிஸ்பிளேவினால் கண்களுக்கு ஃபிளிக்கர் ஃப்ரீ அனுபவம் கிடைக்கும். இந்த ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15.0.1 (ColorOS 15.0.1) கிடைக்கிறது. எல்டிஇ (LTE) வேரியண்ட் கிடைப்பதால், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் (Octa Core MediaTek Helio G100 6nm) கிடைக்கிறது.

வீட்டுக்கு 1 வாங்குற ரேட்.. 9340mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே டேப்!

குளோபல் மார்கெட்டை பொறுத்தவரையில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. ஆனால், சீன மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆட்டோ போகஸ் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 5 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதேபோல பிக்சடு போகஸ் கொண்ட 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ஓப்போ டேப்லெட்டில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட 9340mAh பேட்டரி கிடைக்கிறது. 11 மணி நேரங்களுக்கு வீடியோ ஸ்ட்ரீமிங் கொடுக்கும்.

இந்த ஓப்போ பேட் எஸ்இ மாடலானது 7.39 எம்எம் தடிமன் வருகிறது. ஸ்டார்லைட் சில்வர் மற்றும் டிவைலைட் ப்ளூ கலர்களில் வருகிறது. மேற்கண்ட பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். சீனாவில் இந்த டேப்லெட்டில் ஆரம்ப விலை ரூ.10,660ஆக இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Pad SE With 9340mAh Battery To Launch in India on July 3 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X