ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,999 பட்ஜெட்ல 9340mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. QUAD ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
மெட்டல் டிசைன் மட்டுமல்லாமல், 11 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, குவாட் ஸ்பீக்கர்கள், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 9340mAh சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலைக்கு ஓப்போ பேட் எஸ்இ (OPPO Pad SE) மாடல் அறிமுகமாகி இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் சிப்செட் மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்ட இந்த ஓப்போ பேட் எஸ்இ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ14 5ஜி (OPPO Reno14 5G), ஓப்போ ரெனொ14 ப்ரோ 5ஜி (OPPO Reno14 Pro 5G) மற்றும் ஓப்போ பேட் எஸ்இ மாடல்கள் இன்று அறிமுகமாகி இருக்கின்றன. இதில் மொபைல்கள் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால், பட்ஜெட் விலை பிரியர்களின் கவனம் ஓப்போ பேட் எஸ்இ மீது மாறி இருக்கிறது.

ஓப்போ பேட் எஸ்இ விலை (OPPO Pad SE Price): இந்த ஓப்போ டேப்லெட்டில் வை-பை (Wi-Fi) மற்றும் எல்டிஇ (LTE) ஆகிய 2 மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. வை-பை மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. எல்டிஇ மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.12,999 அறிமுக சலுகையில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.
இந்த ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட்டை பிளிப்கார்ட் (Flipkart), ஓப்போ ஸ்டோர் (OPPO Store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டை ப்ளூ (Blue) மற்றும் சில்வர் (Silver) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ பேட் எஸ்இ அம்சங்கள் (OPPO Pad SE Specifications): இந்த ஓப்போ மாடலில் 11 (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 207 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. விவிட் விஷன் (Vivid Vision) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஓம்னிபியரிங் சவுண்ட் ஃபீல்டு டெக்னாலஜி (OmniBearing Sound Field Technology) கிடைக்கிறது. இந்த டெக்னாலஜியுடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப் கிடைக்கிறது. ஆகவே, 4 ஸ்பீக்கர்களுடன் ஸ்டீரியோ அனுபவம் எதிர்பார்க்கலாம். லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15.0.1 (ColorOS 15.0.1) வருகிறது.
ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் (Octa Core MediaTek Helio G100 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த ஓப்போ மாடலில் 5 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஸ்கிரீன் மிரரிங், டிராக் & ட்ராப், கன்டென்ட் சிங்க் போன்ற சப்போர்ட் உள்ளது. வை-பை மட்டுமல்லாமல், ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








