Home
Gadgets

போடு.. போடு.. விட்றாத.. ரூ.11,000 பட்ஜெட்ல 9340mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. எந்த டேப்லெட்?

ரூ.10,000 பட்ஜெட்டில் பக்கா டேப்லெட் தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்கள் கூட ரூ.1,000 கொடுத்தால் 9340mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 11 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஓப்போ பேட் எஸ்இ (OPPO Pad SE) மாடலை டிஸ்கவுண்ட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த வை-பை டேப்லெட் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வை-பை கனெக்டிவிட்டி மாடல் மட்டுமல்லாமல், எல்டிஇ (LTE) கனெக்டிவிட்டி மாடலும் இதில் கிடைக்கிறது. ஆகவே, வை-பை (Wi-Fi) மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் எல்டிஇ (LTE) மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த டேப்லெட்களின் விலையும் முறையே ரூ.13,999ஆகவும், ரூ.16,999ஆகவும் இருக்கிறது.

போடு.. போடு.. விட்றாத.. ரூ.11,000 பட்ஜெட்ல 9340mAh பேட்டரி.. மாடல்?

இப்போது, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் பிளிப்கார்ட் தளத்தில் டிஸ்கவுண்ட் போக ரூ.11,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.960 கிரெடிட் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,039 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.10,000 பட்ஜெட்டில் பக்கா மாடலை தேடிக்கொண்டிருந்தால், ரூ.1,000 கூடுதலாக கொடுத்து இந்த ஓப்போ மாடலை வாங்கி கொள்ளுங்கள்.

அதேபோல 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடல் வேண்டுமானால், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். இதன் மார்கெட் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.1,200 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே,13,799 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஓப்போ பேட் எஸ்இ முக்கிய அம்சங்கள்: இந்த டேப்லெட்டில் 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz அடாப்டிவ் ரெப்ஃப்ரெஷ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 207 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் விவிட் மோட் கலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் (Octa Core MediaTek Helio G100 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஓப்போ நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 15.0.1 (ColorOS 15.0.1) கிடைக்கிறது. மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட்டில் 5 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் கேமரா மற்றும் 5 எம்பி பிக்சடு போகஸ் செல்பீ கேமரா கிடைக்கிறது. 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9340mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) கிடைக்கிறது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), டைப்-சி ஹெட்போன் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் பவர் சேவிங் என்ஜின், 36 மாதங்களுக்கான ஃப்ளூயன்சி புரொடெக்சன் மற்றும் ஐ-கேர் டிஸ்பிளே போன்ற கூடுதல் பீச்சர்கள் உள்ளன.

கூகுள் ஜெமினி (Google Gemini), கிட்ஸ் மோட் (Kids Mode) கிடைக்கிறது. ஆடியோவில் குவாட் ஸ்பீக்கர்களை (Quad Speakers) கொடுத்துள்ளது. ஆகவே, ஓடிடி பிரியர்களுக்கு பக்காவான மாடலாக இருக்கும். இந்த ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட்டை ஸ்டார்லைட் சில்வர் (Starlight Silver) மற்றும் டிவைலைட் ப்ளூ (Twilight Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Pad SE With 9340mAh Battery Available At Cheapest Price Than Launch Price in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X