பிரிச்சி விட்டாப்ல OPPO.. 5.46 மி.மீ பாடியில் 8000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் மற்றும் டேப்லெட்கள் வெளியாகி வருகின்றன. இதில் அல்ட்ரா ஸ்லிம் பேட் மாடலாக ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் (OPPO Pad Mini Matte Display Edition) களமிறங்கி இருக்கிறது. 5.46 எம்எம் பாடியில் 8000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இதன் பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.
ஸ்மார்ட்போனை விட பெரிய டிஸ்பிளே வேண்டும், ஆனால் லேப்டாப் போல வெயிட் மற்றும் பெரிய சைஸ் இருக்க கூடாது என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 5.46 எம்எம் மற்றும் 279 கிராம் எடையில் வெளியாகி இருக்கும், இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் பக்காவாக இருக்கும். அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட் கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் அம்சங்கள் (OPPO Pad Mini Matte Display Edition Specifications): 8.8 இன்ச் (2520 x 1680 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 2.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாக ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் கொடுத்துள்ளது. அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
கலர்ஓஎஸ் 6 (ColorOS 16) கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொண்ட மாடலாக இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் இருக்கிறது. ஸ்லிம் மாடலாக இருப்பதால், குவாட் ஸ்பீக்கர்களை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் 2 மைக்ரோபோன்களை கொடுத்து இருக்கிறது.
67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.46 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் பேட் மாடலுக்கு இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் பக்காவாக இருக்கும். மொத்தமாக 279 கிராம் எடை கொடுத்துள்ளது.
டூயல் பேண்ட் வை-பை 802.11 பிஇ கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. மேலும், ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) மற்றும் டைப்-சி போர்ட் கனெக்டிவிட்டிகள் உள்ளன. லாவெண்டர் பர்பிள் (Lavender Purple) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.94,999 ஆக இருக்கிறது.
வருகிற அக்டோபர் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஓப்போ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 30 மாதங்களுக்கு ஜீரோ டவுன்பேமெண்ட், கிரெடிட் கார்டுகளுக்கு 15 சதவீத கேஷ்பேக் மற்றும் 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ ஆகிய சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
