Home
Gadgets

தூக்கிவாரும் பட்ஜெட்.. ரூ.15210 போதும்.. 11.4 இன்ச் டிஸ்பிளே.. QUAD ஸ்பீக்கர்.. 8000mAh பேட்டரி..எந்த மாடல்?

ரூ.15,000 பட்ஜெட்டில் 11.4 இன்ச் டிஸ்பிளே, ஈஐஎஸ் கேமரா, குவாட் ஸ்பீக்கர்கள், 33W சார்ஜிங், 8000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மற்றும் மெட்டல் பாடி டிசைனில் ஓப்போ பேட் ஏர்2 (OPPO Pad Air2) வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஓப்போ பேட் ஏர்2 அம்சங்கள் (OPPO Pad Air2 Specifications): இந்த டேப்லெட்டில் 11.4 இன்ச் (2408 x 1720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.4K ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ரெனோ போன்களில் வரும் ஸ்மார்ட் சைடுபார் (Smart Sidebar) வருகிறது.

தூக்கிவாரும் பட்ஜெட்.. ரூ.15210 போதும்.. 11.4 இன்ச் டிஸ்பிளே டேப்லெட்!

மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ பேட் ஏர்2 டேப்லெட்டில் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

ஈஐஎஸ் டெக்னாலஜி (EIS Technology), 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 5X ஜூமிங் சப்போர்ட் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா வருகிறது. 720P வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் வர இருக்கின்றன. இந்த ஓப்போ பேட் ஏர்2 மாடலில் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது.

தூக்கிவாரும் பட்ஜெட்.. ரூ.15210 போதும்.. 11.4 இன்ச் டிஸ்பிளே டேப்லெட்!

மிட்-ரேஞ்ச் போன்களை போல கைரோ (Gyro), லைட் சென்சார் (Light Sensor), ஹால் சென்சார் (Hall Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) மற்றும் ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor) கொண்டிருக்கிறது. சார்ஜிங் மற்றும் ஹெட்போன் சப்போர்ட் கொண்ட டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது.

இந்த ஓப்போ டேப்லெட்டில் 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி வருகிறது. ஒரு ஃபுல் சார்ஜிக்கு தொடர்ந்து 13.5 மணி நேரம் பேக்கப் கொடுக்கும். இந்த பேட்டரி கொண்டிருந்தும், 6.89 மிமீ தடிமன் மற்றும் 538 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட்டின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் கலிலியோ (GALILEO) சப்போர்ட் வருகிறது. ஸ்பேஸ் கிரே (Space Grey), அரோரா பர்பிள் (Aurora Purple) மற்றும் ஸ்ட்ரீமர் சில்வர் (Streamer Silver) கலர்களில் வருகிறது.

இந்த ஓப்போ பேட் ஏர்2 டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,210ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,550ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,895ஆக இருக்கிறது.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, ப்ரீ ஆர்டருக்கு வந்துள்ளது. வரும் மே 31ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. இந்திய மார்கெட்டில் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Pad Air2 With 8GB RAM, Helio G99 Chip Sale Form May 31 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X