OPPO செம்ம போடு.. 10420mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 6 ஸ்பீக்கர்கள்.. 16GB ரேம்.. 4K கேமரா.. எந்த மாடல்?
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட டேப்லெட் மாடலாக ஓப்போ பேட் 6 (OPPO Pad 6) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக 6 ஸ்பீக்கர்கள், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஓப்போ பேட் 6 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஓப்போ பேட் 6 அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஓப்போ ரெனோ16 சீரிஸ் மாடல்களுடன் களமிறங்கி இருக்கிறது. பெரிய டிஸ்பிளே, பெரிய பேட்டரி மற்றும் அதிக ஃபாஸ்ட் சார்ஜிங்கை விரும்பும் கஸ்டமர்களுக்கு ஏற்ப பீச்சர்களை பேக் செய்துள்ளதால், குளோபல் மார்கெட் மீதான எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது. முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.

ஓப்போ பேட் 6 அம்சங்கள் (OPPO Pad 6 Specifications): 12.1 இன்ச் (3000 x 2120 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 540Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 304 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது.
டேப்லெட்டுக்கு ஏற்ற பிரத்யேக பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Arm Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 8 எம்பி ரியர் கேமரா வருகிறது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ பேட் 6 மாடல் கொடுத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 6 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 மைக்ரோபோன்களை இந்த ஓப்போ பேட் 6 கொடுத்துள்ளது.
67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10420mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.99 எம்எம் தடிமன் மற்றும் 579 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆம்பியன் லைட் சென்சார், கலர் டெம்ப்ரேச்சர் சென்சார் உள்ளிட்டவை கிடைக்கின்றன. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் டைப்-சி சார்ஜிப் போர்ட் போன்ற கனெக்டிவிட்டி உள்ளது.
ஓப்போ பேட் 6 விலை (OPPO Pad 6 Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,158ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,778ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.60,389ஆக இருக்கிறது. டீப் ஸ்பேஸ் கிரே (Deep Space Gray), கேலக்ஸி சில்வர் (Galaxy Silver) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications