மொத்தமா வெயிட்டிங்.. 10165mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. புது OPPO டேப்லெட்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஓப்போ பிரியர்களுக்கு கம்மியான டேப்லெட் மாடல்களே இருக்கின்றன. இதனால், புதிய மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் 10165mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே கொண்ட ஓப்போ பேட் 5 (OPPO Pad 5) டேப்லெட் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த ஓப்போ பேட் 5 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த டேப்லெட் சீன மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இப்போது, இந்தியாவின் பிஐஎஸ் (BIS) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. இதை டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Sudhanshu Ambhore) அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சொல்லப்போனால், பிஐஎஸ் சர்டிபிகேஷனை இந்த டேப்லெட் முடித்துவிட்டது.

இதில் டைமன்சிட்டி 9400 பிளஸ் (Dimensity 9400+) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 12.1 இன்ச் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வர இருக்கிறது. 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. 10165mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த பீச்சர்களை சுதான்ஷு அம்போர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பட்ஜெட் விவரங்களை குறிப்பிடவில்லை. இருப்பினும், சீன மார்கெட்டில் இந்த ஓப்போ பேட் 5 டேப்லெட் வெளியாகிவிட்டதால், முழு பீச்சர்களை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல எந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என்பதையும் பார்க்க முடியும். சீன வேரியண்ட்டின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஓப்போ பேட் 5 அம்சங்கள் (OPPO Pad 5 Specifications): 3K ரெசொலூஷன் கொண்ட 12.1 இன்ச் (3000 x 2120 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 304 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் கொடுக்கிறது.
கலர் அக்கியூரசி கொடுக்க 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் ஓர்ஜின்ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ 3nm (Octa Core MediaTek Dimensity 9400+) 3என்எம் சிப்செட் மற்றும் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிடைக்கிறது.
8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறு. 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10165mAh பேட்டரி கிடைக்கிறது. வெறும் 5.99 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது. இருப்பினும், 579 கிராம் எடை கொடுக்கிறது. லக்கி பர்பிள் (Lucky Purple) மற்றும் கேலக்ஸி சில்வர் (Galaxy Silver) கலர்களில் வெளியாகியது.
மேலும், ஸ்பேஸ் கிரே (Space Gray) கலரும் கிடைக்கிறது. இந்தியாவில் இதே கலர்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவொரு வை-பை மாடலாக இருக்கிறது. ஆகவே, வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டிகள் உள்ளன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








