Home
Gadgets

OPPO புது டேப்லெட்.. 10165mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் புதிய ஓப்போ பேட் 5 (OPPO Pad 5) மாடல் களமிறங்கி இருக்கிறது. 10165mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட் கொடுக்கிறது. இந்த டேப்லெட்டின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Find X9 Pro) ஆகிய மாடல்கள் களமிறங்கின. அதோடு டபுள் ட்ரீட்டாக இந்த ஓப்போ பேட் 5 மாடல் வெளியாகியது. பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுத்துள்ளது.

OPPO புது டேப்லெட்.. 10165mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்!

ஓப்போ பேட் 5 அம்சங்கள் (OPPO Pad 5 Specifications): இந்த ஓப்போ மாடலில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட 3என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ (3nm Octa Core MediaTek Dimensity 9400+) சிப்செட் மற்றும் அந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. 12.1 இன்ச் (3000 x 2120 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவிஸ் 3K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 540Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 304 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

இதுபோக 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த ஓப்போ பேட் 5 மாடலில் 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 8 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10165mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் வெறும் 5.99 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. வை-பை 6, ப்ளூடூத் 5.4, என்எப்சி போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன. லக்கி பர்பிள் (Lucky Purple), கேலக்ஸி சில்வர் (Galaxy Silver) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Gray) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இந்த ஓப்போ பேட் 5 மாடலின் 8 ஜிபி ரேம் + 128 மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,056ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,523ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,223ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,385ஆகவும் இருக்கிறது.

மேலும், 8 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட சாப்ட் லைட் வெர்ஷனின் விலை ரூ.38,223ஆக இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட சாப்ட் லைட் வெர்ஷனின் விலை ரூ.41,929ஆகவும் இருக்கிறது. இந்த மாடலுக்கான ஸ்மார்ட் டச் கீபோர்ட்டின் (Smart Touch Keyboard) விலை ரூ.8,622ஆக இருக்கிறது.

அதேபோல ஓப்போ பென்சில் 2 ப்ரோ (OPPO Pencil 2 Pro) மாடலின் விலை ரூ.6,155ஆகவும், ஸ்மார்ட் ப்ரொடெக்டிவ் கேஸின் (Smart Protective Case) விலை ரூ.2,454ஆகவும் இருக்கிறது. அக்டோபர் 22ஆம் தேதி முதல் சீன மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதற்கு பிறகு மற்ற நாடுகளில் வெளியாவது குறித்த விவரங்களை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Pad 5 With 16GB RAM 10165mAh Battery 67W Charging Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X