Home
Gadgets

போட்டான் பாரு OPPO.. 10165mAh பேட்டரி.. 67W சூப்பர்வூக் சார்ஜிங்.. 144Hz எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டடில் ஓப்போ பேட் 5 (OPPO Pad 5) டேப்லெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது, விற்பனை விவரங்களுடன் பேட்டரி, டிஸ்பிளே மற்றும் ஏஐ பீச்சர்கள் வெளியாகி உள்ளன. கலர் மற்றும் டிசைன் விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஓப்போ பேட் 5 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ரெனோ 15 சீரிஸ் (OPPO Reno 15 Series) மாடல்கள் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. தேதி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதனால் ஓப்போ பிரியர்கள் வெயிட்டிங் செய்ய தொடங்கிவிட்டனர். இப்போது, கூடவே ஓப்போ பேட் 5 டேப்லெட் மாடலும் வெளியாக இருப்பது டபுள் ட்ரீட்டாக அமைந்துவிட்டது.

போட்டான் பாரு OPPO.. 10165mAh பேட்டரி.. 67W சூப்பர்வூக் சார்ஜிங்!

இந்த ஓப்போ பேட் 5 டேப்லெட் பிளிப்கார் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதனால், அந்த தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, அதில் டிசைன், கலர் விவரங்களுடன் பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. ஆகவே, 10165mAh பேட்டரி, 2.8K ரெசொலூஷன், ஏஐ பவர்டு நோட் டேக்கிங் (AI Powered Note Taking) கிடைக்கிறது.

மேலும், கிரே (Grey) மற்றும் பர்பிள் (Purple) கலர் கொண்டுள்ளது. ஓப்போ பென்சில் 2 ப்ரோ (OPPO Pencil 2 Pro) கொடுக்கப்பட உள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே பிளிப்கார்ட் மைக்ரோசைட் வழியாக தெரிய வந்துள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள, சீன வெர்ஷனை பார்க்க வேண்டி இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரே மாடலாகவே இருக்கும்.

ஓப்போ பேட் 5 அம்சங்கள் (OPPO Pad 5 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் 3என்எம் (Octa Core Dimensity 9400+ 3nm) சிப்செட் இந்த ஓப்போ பேட் 5 மாடலில் கிடைக்கிறது. மேலும், இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 6 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.

12.1 இன்ச் (3000 x 2120 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 3K ரெசொலூஷன் மட்டுமல்லாமல் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த ஓப்போ பேட் 5 டேப்லெட் மாடலுக்கு கிடைக்கிறது. 900 நிட்ஸ் எச்பிஎம் (HBM) பிரைட்னஸ் கொடுக்கிறது. ஐ புரொடெக்சன் கொடுத்துள்ளது. ஓப்போ பென்சில் 2 (OPPO Pencil 2), ஓப்போ பென்சில் 2 ப்ரோ ஸ்டைலஸ் (Pencil 2 Pro Stylus) சப்போர்ட் உள்ளது.

மேலும், ஓப்போ பேட் 5 ஸ்மார்ட் டச் கீபோர்ட் (OPPO Pad 5 Smart Touch Keyboard) சப்போர்ட் கிடைக்கிறது. 8 எம்பி பிரைமரி கேமரா உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு இந்த ஓப்போ பேட் 5 மாடலில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. 10165mAh பேட்டரியை கொடுத்துள்ளது.

இந்த பேட்டரிக்கு 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைத்துள்ளது. 5.99 மிமீ தடிமன் மற்றும் 579 கிராம் எடை உள்ளது. வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Pad 5 With 10165mAh Battery 67W Charging Launching India Soon Flipkart Availability Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X