ஓஹோனு ஒரு Tablet.. 12 இன்ச் டிஸ்பிளே.. 3K தரம்.. 16GB ரேம் 512GB மெமரி.. Oppo வெளியிடும் புது டேப்லெட் லீக்..
ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை டேப்லெட் (Tablet) சாதனமான ஒப்போ பேட் 3 (Oppo Pad 3) வெளியிடவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக, இந்த புதிய டேப்லெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறப்போகிறது என்ற லீக் தகவல் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதிதாக உங்களுக்கு டேப்லெட் வாங்க வேண்டும் என்ற ஐடியா இருந்தால், கொஞ்சம் பொறுங்கள். ஒப்போ நிறுவனம் விரைவில் ஒரு அட்டகாசமான டேப்லெட் சாதனத்தை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், மிகப் பெரிய டிஸ்பிளேவுடன் 3K தரத்தில் இந்த டேப்லெட் வெளிவர இருப்பதாக தகவல்கள் இணையம் முழுக்க பரவி வருகிறது.

ஒப்போ பேட் 3 டேப்லெட் (Oppo Pad 3 Tablet):
பேசும்பொருளாக மாறியுள்ள புதிய ஒப்போ பேட் 3 டேப்லெட் (Oppo Pad 3 Tablet) பற்றிய விபரங்கள் இதோ. ஒப்போ நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை டேப்லெட் சாதனத்தில் நீண்ட காலமாக வேலை செய்து வருவது நாம் அறிந்த ஒன்றே என்றாலும், இதில் என்னென்ன அம்சங்களை நிறுவனம் வழங்கவுள்ளது என்ற தகவல் இதுவரை மர்மமாகவே இருந்து வந்தது.
ஆனால், சமீபத்தில் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக வெளியான லீக் தகவல் இந்த மர்மத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது. புதிதாக விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் ஒப்போ பேட் 3 டேப்லெட் (Oppo Pad 3 Tablet) சாதனத்தில் இடம்பெறும் முக்கிய அம்சங்களின் விபரங்கள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் இந்த புதிய ஒப்போ டேப்லெட் (Oppo Tablet) சாதனம் 12" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் வருமென்று கூறப்பட்டுள்ளது.
இந்த 12" இன்ச் டிஸ்பிளே 3K ரெசொலூஷன் தரத்தில், மிகவும் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கக்கூடிய டேப்லெட் சாதனமாக வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. அடுத்தபடியாக, இந்த புதிய ஒப்போ பேட் 3 சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) உடன் 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ்ஜை இது பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடடே ஒப்போ பேட் 3 சாதனத்திற்கும் ஒப்போ பேட் 2 சாதனத்திற்கும் இவ்வளவு வித்தியாசமா?
ஒப்போ பேட் 3 டேப்லெட்டின் அடிப்படை வேரியண்ட் மாடல் 8GB ரேம் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்போ பேட் 3 டேப்லெட் சாதனம் 9510mAh பேட்டரியை பேக் செய்யுமென்று லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இது 67W சார்ஜிங் ஆதரவை பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவரவிருக்கும் புதிய ஒப்போ பேட் 3 சாதனம் மெட்டல் யுனி-பாடி டிசைன் வடிவமைப்பை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒப்போ பேட் 2 சாதனத்துடன் ஒப்பிடுகையில், ஒப்போ பேட் 3 பல மேம்படுத்தல்களை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. Oppo Pad 2 டேப்லெட் சாதனம் 11.61" இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் (IPS LCD display) உடன் 2800 x 2000 பிக்சல் தீர்மானத்துடன் 144Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டு வெளிவந்தது. ஆனால், பேட் 3 டேப்லெட் 12" இன்ச் டிஸ்பிளேவுடன் 3K ரெசொலூஷனை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








