OPPO சம்பவம்.. டேப்லெட் மார்க்கெட்ல புது OPPO Pad 3 Pro தெறிக்கவிடுது.. என்ன விலை? என்ன அம்சம்?
ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் புதிய ஒப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட் (OPPO Pad 3 Pro Tablet) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் 12.1" இன்ச் அளவு கொண்ட 3K திறன் கொண்ட 144Hz LCD ஸ்கிரீனை கொண்டுள்ளது. இது டால்பி விஷன் உடன் 6 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஆம்னி பியரிங் சவுண்ட் பீல்டு டெக்னாலஜி மற்றும் டால்பி அட்மாஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் கீபோர்ட் மற்றும் பவர்புல் ஸ்டைலஸ் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
புதிய ஒப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட் (OPPO Pad 3 Pro Tablet) சாதனம் 12.1" இன்ச் அளவு கொண்ட 3200 x 2120 பிக்சல் திறன் உடைய 3K டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 7:5 அஸ்பெக்ட் ரேஷியோ (aspect ratio), 303 PPI, டால்பி விஷன் (Dolby Vision), 900 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (900 nits brightness) ஆதரவை கொண்டுள்ளது.

ஒப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட் (OPPO Pad 3 Pro Tablet):
இந்த டேப்லெட் டிவைஸின் டிஸ்பிளே 144/120/90/60/50/48/30Hz என்று பல்வேறு விதமான ரெஃப்ரஷ் ரேட் உடன் இயங்கக்கூடியது. இது 540Hz டச் சாம்ப்ளிங் ரேட் உடன் வருகிறது. இந்த புதிய OPPO Pad 3 Pro சாதனம் 3.4Hz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) ஆதரவை கொண்டுள்ளது.
இந்த ஒப்போ பேட் 3 ப்ரோ (OPPO Pad 3 Pro) சாதனம் 12GB LPDDR5X ரேம் (RAM) உடன் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் (storage) உடன் வருகிறது. இந்த டேப்லெட் சாதனம் ஆண்ட்ராய்டு 14 உடன் கலர் ஓஎஸ் 14.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. டிசம்பர் 2024 இல் இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 உடன் கலர் ஓஎஸ் 15 அப்டேட்டை பெரும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்த OPPO Pad 3 Pro டேப்லெட் சாதனம் 13MP ரியர் கேமரா உடன் 8MP செல்பி கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது. இது 6 ஸ்பீக்கர்களுடன் Hi-Res ஆதரவை கொண்டுள்ளது. இது 268.66×195.06×6.49mm அளவுடன், 586g எடையை கொண்டுள்ளது. இது Wi-Fi 7 802.11 be (2.4GHz + 5GHz), ப்ளூடூத் (Bluetooth 5.4), USB Type-C, 5ஜி ஷேரிங் (5G sharing), NFC இணைப்புகளை கொண்டுள்ளது.
ஒப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட் விலை (OPPO Pad 3 Pro Tablet Price):
இந்த புதிய ஒப்போ பேட் 3 ப்ரோ சாதனம் 9510mAh பேட்டரியை 67W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் (fast charging) ஆதரவுடன் பேக் செய்துள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், ஒப்போ பேட் 3 ப்ரோ (OPPO Pad 3 Pro) ஸ்டார்லைட் ப்ளூ (Starlit Blue) நிற மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 53,445 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 12GB + 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்ட் மாடலாக மட்டுமே வெளிவந்துள்ளது. இது Pencil 2 Pro மற்றும் Smart Keyboard ஆதரவையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications