Home
Gadgets

இதோ வந்துட்டான்ல ஜம்முனு.. புது OPPO Pad 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. என்ன அம்சம்? என்ன விலை?

ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் புதிய ஒப்போ பேட் 3 (OPPO Pad 3) டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தை ஒப்போ நிறுவனம் மிக விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஒப்போ பேட் 3 டேப்லெட் (OPPO Pad 3 Tablet) சாதனத்தின் அறிமுகத்தை உறுதி செய்யும் விதமாக, நிறுவனம் இப்போது புதிய டீஸர்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஒப்போ பேட் 3 டேப்லெட் (OPPO Pad 3 Tablet) சாதனம் டேப்லெட் சந்தையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. காரணம், இது சிறப்பான அம்சங்களுடன் பெரிய டிஸ்பிளே (Display), அதிக திறன் கொண்ட பேட்டரி (Battery), ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast charging), டேப்லெட் அனுபவத்தை சிறக்க செய்யும் ஸ்டைலஸ் சப்போர்ட் (Stylus support) போன்ற பல ஆதரவுகளை பட்ஜெட் செக்மென்ட்டில் வழங்கும் ஒரு சாதனமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ வந்துட்டான்ல ஜம்முனு.. புது OPPO Pad 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு..

இந்த புதிய ஒப்போ பேட் 3 டேப்லெட் (OPPO Pad 3 Tablet) சாதனத்தின் புகைப்படங்கள் டீசர் உடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தோற்றம் மிகவும் கண்கவர் வண்ணங்களுடன் வருகிறது. இந்த புதிய டேப்லெட் பர்பிள் (Purple), ப்ளூ (Blue) மற்றும் சில்வர் (Silver) கலர் நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்போ பேட் 3 டேப்லெட் (OPPO Pad 3 Tablet) 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB and 12GB + 512GB மாடல் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் 11.6" இன்ச் 2.8K LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே சாதனம் 144Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்போ பேட் 3 டேப்லெட் (OPPO Pad 3 Tablet) சாதனம் முந்தைய டைமென்சிட்டி 9000 சிப்செட்டில் இருந்து, சக்தி வாய்ந்த டைமென்சிட்டி 8350 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய சிப்செட் பிளாக்ஷிப் சாதனங்களில் எதிர்பார்க்கப்படும் சிறந்த சக்தி வாய்ந்த சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிப்செட் ஒப்போ போனின் ஒப்போ ரெனோ 13 ப்ரோ சாதனத்தில் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஒப்போ பேட் 3 டேப்லெட் (OPPO Pad 3 Tablet) சாதனம் 9510mAh பேட்டரி உடன் 67W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் எடை 533 கிராம் ஆகவும், இது 19 கிராம் ஒப்போ பேட் 2 சாதனத்தை விட குறைந்த எடையை கொண்டுள்ளது என்றும் ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ. 29,000 முதல் ரூ. 35,000 விலைக்குள் இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்போ டேப்லெட் (OPPO Tablet) சாதனம் ஆண்ட்ராய்டு 15 உடன் கலர் ஓஎஸ் 15 (Android 15-based ColorOS 15) இல் இயங்கும். இந்த புதிய டேப்லெட் குவாட் ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மாஸ், டால்பி விஷன் உடன் வெளிவரும். இந்த நவம்பர் 25 ஆம் தேதி ஒப்போ நிறுவனம் இந்த புதிய டேப்லெட் சாதனத்தை ஒப்போ ரெனோ 13 சீரிஸ் (OPPO Reno 13 series) போன்களுடன் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Pad 3 Launch Date Confirmed November 25 2024 Check Expecting Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X