Home
Gadgets

சத்தியமா இது OPPO Pad 3 தான்.. ஒன்பிளஸ் பேட் இல்லை.. கன்பியூஸ் ஆகாதீங்க.. எப்போது அறிமுகம்? என்ன விலை?

ஒப்போ (OPPO) நிறுவனம் விரைவில், புதிதாக அதன் போர்ட்போலியோவில் ஒப்போ பேட் 3 சீரிஸ் டேப்லெட் (OPPO Pad 3 Series Tablet) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான வேலைகளை ஒப்போ நிறுவனம் மிகவும் தீவிரமாக செய்து வருகிறது. இந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் 2 டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இதில் ஒப்போ பேட் 3 (OPPO Pad 3) மற்றும் ஒப்போ பேட் 3 ப்ரோ (OPPO Pad 3 Pro) ஆகிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவே, சமீபத்தில் வெளியான லீக் தகவல் OPPO Pad 3 சாதனத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்களின் தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த டேப்லெட் சாதனத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் காரணமாக, இப்போது தொழில்நுட்ப ஆர்வலர்களின் கவனத்தை இந்த ஒப்போ டேப்லெட் (OPPO Tablet) ஈர்த்துள்ளது. இந்த புதிய OPPO Pad 3 சாதனத்தில் நிறுவனம் என்னென்ன அம்சங்களை வழங்கவுள்ளது? இதன் விலை என்னவாக இருக்குமென்பதை இப்போது பார்க்கலாம்.

சத்தியமா இது OPPO Pad 3 தான்.. ஒன்பிளஸ் பேட் இல்லை.. ன்ன விலை?

புதிய ஒப்போ பேட் 3 (OPPO Pad 3) டேப்லெட் சாதனம் 11.6" இன்ச் அளவு கொண்ட 2.8K LCD டிஸ்பிளேவை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே உயர் திறன் ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ஒப்போ பேட் 2 சாதனத்தில் இடம்பெற்ற ரெஃப்ரஷ் ரேட்டை விட ஒப்போ பேட் 3 (OPPO Pad 3) இல் அதிக ரெஃப்ரஷ் ரேட்டை நாம் எதிர்பார்க்கலாம்.

ஒப்போ பேட் 3 ப்ரோ (OPPO Pad 3 Pro) டேப்லெட் சாதனத்தில் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) இடம்பெறும் என்பதை நிறுவனம் லீக் செய்திருந்தது. அதேபோல், புதிய ஒப்போ பேட் 3 (OPPO Pad 3) டேப்லெட் சாதனத்தில் நிறுவனம் மீடியாடெக் டைமென்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 chipset) இடம்பெற வாய்ப்பிருப்பதாக லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மற்றொரு லீக் தகவலின் படி, ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 13 ப்ரோ (ஒப்பொ reno 13 Pro) சாதனத்திலும் இதே சிப்செட்டை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்போ பேட் 3 (OPPO Pad 3) சாதனம் 9510mAh பேட்டரியை (Battery) 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த டேப்லெட் மொத்தமாகவே வெறும் 533 கிராம் எடையுடன், 6.29mm அளவு கொண்ட ஸ்லிம் மாடலாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்த புதிய டேப்லெட் சீரிஸ் சாதனங்கள் மற்றும் அதன் புதிய ரெனோ 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனங்களை வரும் நவம்பர் 25 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்காடுகிறது. உலக சந்தை மற்றும் இந்திய சந்தைக்கு இந்த சாதனங்கள் ஜனவரி 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தோராயமாக ரூ. 35,000 விலையில் வெளிவருமென்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Pad 3 and OPPO Pad 3 Pro Specs and Launch Details Leaked Online What To Expect In Price Tag
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X