125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சாதனத்தை அறிமுகம் செய்யும் ஒப்போ!

|

தொலைபேசியை வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய ஒப்போவின் 125W ஃபாஸ்ட் சார்ஜர் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்போ 125W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ 125W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ 125W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ கடந்த ஜூலையில் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் குறித்து விளக்கியிருந்தது . ஒப்போ இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் குறிப்பிடவில்லை. ஒப்போவின் 125W ஃபிளாஷ் சார்ஜிங் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

2021 முதல் காலாண்டில் வெளியிடப்படும்

2021 முதல் காலாண்டில் வெளியிடப்படும்

இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஒப்போ 125W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 2021 முதல் காலாண்டில் வெளியிடப்படும். அதாவது ஜனவரி முதல் மார்ச் வரை எப்போது வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் ஒப்போ சாதனங்கள் வேகமாக சார்ஜ் செய்யமுடியும்.

ஓவர்ஹெட் அடாப்டர்

ஓவர்ஹெட் அடாப்டர்

125W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஓவர்ஹெட் அடாப்டர் மட்டுமின்றி சார்ஜிங் கேபிள் மற்றும் பேட்டரி ஆகியவற்றை வேகமான சார்ஜிங் செய்யும் ஆதரவுடன் இது வருகிறது. 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய இந்த சாதனம் இன்னும் இந்திய சந்தையை எட்டவில்லை.

ஒப்போ ஏஸ் தொடர் சாதனம்

ஒப்போ ஏஸ் தொடர் சாதனம்

முன்னதாக இதேபோல் ரெனால்ட் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஒப்போவின் ஏஸ் தொடர் சாதனம் 125W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படலாம். அந்த சாதனம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. புதிய சாதனம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படலாம். இந்த காலகட்டத்தில் வெளியிடப்படக்கூடிய ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸ் தொலைபேசிகளில் 125W சார்ஜிங் சிஸ்டம் சேர்க்கப்படும்.

4000 எம்ஏஎச் பேட்டரியை அதிவேகமாக சார்ஜ் செய்யலாம்

4000 எம்ஏஎச் பேட்டரியை அதிவேகமாக சார்ஜ் செய்யலாம்

இந்த புதிய தொழில்நுட்பம் 4000 எம்ஏஎச் பேட்டரியை முன்னதாக சார்ஜ் செய்ததைவிட பாதி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். 125W ஃபிளாஷ் சார்ஜிங்கில் உகந்த சார்ஜிங் செயல்திறனுக்காக இரு-செல் வடிவமைப்பு தேவைப்படும் என்று ஒப்போ முன்னதாகவே அறிவித்திருந்தது. இந்த வெளியீட்டு நிகழ்வு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo May Launched 125W Fast Charger in Next Year

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X