Oppo AR கண்ணாடி நவம்பர் 17ம் தேதி அறிமுகமா? என்னவெல்லாம் இந்த கண்ணாடியில் எதிர்பார்க்கலாம்?

|

ஒப்போ நிறுவனம் தனது AR கண்ணாடிகளை நவம்பர் 17 ஆம் தேதி (இன்று) நடக்கும் INNO Day 2020 மாநாட்டில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. ஒப்போ நிறுவனம் அதன் ஏ.ஆர் கிளாஸ் மட்டுமின்றி, அதன் எதிர்கால திட்டங்களையும், பிற தயாரிப்புகளையும் கூட காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போவின் AR கண்ணாடி

ஒப்போவின் AR கண்ணாடி

AR கண்ணாடிகள் சீனாவின் ஷென்சனில் வெளியிடப்படும். ஒப்போ ஏற்கனவே அதற்கான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சில வகை சென்சார்களின் பார்வையை நமக்கு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடிகள் ஒரு முன்மாதிரியாக அறிமுகம் செய்யப்பட்டு உருவாக்கத்திற்குத் தொடங்கப்படும், பின்னர் வாங்குவதற்கு கேட்ஜெட்ஸ் சந்தைகளில் விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமை என்றாலே ஒப்போ தானே.!

புதுமை என்றாலே ஒப்போ தானே.!

புதுமை என்று வரும்போது ஒப்போ நிறுவனம் எப்பொழுதும் முன்னணி நிறுவனங்களில் தனித்து நின்று செயல்பட்டு வருகிறது. ஒப்போ நிறுவனத்தின் INNO நாள் நிகழ்வு என்பது கூகிள், சாம்சங், ஆப்பிள் போன்றவற்றால் நடத்தப்பட்ட நிகழ்வைப் போன்றது. இந்நிகழ்வுகளில் நிறுவனங்கள் தங்களது வரவிருக்கும் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்திக் காட்சிப்படுத்தும்.

பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!

மெட்டல் ஃபிரேம் உடன் AR தொழில்நுட்பம்

மெட்டல் ஃபிரேம் உடன் AR தொழில்நுட்பம்

ஒப்போ நிறுவனத்தின் வரவிருக்கும் ஏ.ஆர் கிளாஸ்கள் ஒரு மெட்டல் ஃபிரேமைக் கொண்டுள்ளது, இவை கண்ணாடியின் விளிம்புகளில் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. AR செயல்பாடு பல்வேறு பொருள்களை காண உதவுகிறது மற்றும் பிற AR தொழில்நுட்பத்தைக் கண்ணாடிகள் மூலம் நிகழ் நேரத்தில் அனுபவிக்க உதவும் மற்றும் ஒரு வேடிக்கையான அனுபவத்தை வழங்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்டிபிள் மைக், கேமரா, 3D சவுண்ட் இன்னும் பல..

மல்டிபிள் மைக், கேமரா, 3D சவுண்ட் இன்னும் பல..

ஒப்போ ஏஆர் கேமரா முன்பக்கத்தில் 2 கேமராக்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இதில் கூடுதலாக மல்டிபிள் மைக்குகள், வாய்ஸ் இன்டெராக்ஷன், 3D சரவுண்ட் சவுண்ட் மற்றும் பலவற்றின் மூலம் இடஞ்சார்ந்த ஆடியோ பதிவு அம்சத்தையும் இந்த ஒப்போ AR கண்ணாடி வழங்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை to மதுரை வெறும் 45 நிமிடம் தான்.. பட்டடையை கிளப்பும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பம்..சென்னை to மதுரை வெறும் 45 நிமிடம் தான்.. பட்டடையை கிளப்பும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பம்..

 ஒப்போவின் ரோலபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்

ஒப்போவின் ரோலபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்

இத்துடன் இந்நிகழ்ச்சியில் ஒப்போவின் ரோலபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ நிறுவனத்தின்ரோலபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போனின் கான்செப்ட் மற்றும் டிசைன் மற்றொரு வெய்ப்போ பதிவில் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo has teased the launch of its AR glasses on November 17 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X