ஆளுக்கு ஒன்னு வாங்கும் விலையில் Oppo-வின் முதல் Tablet இந்தியாவில் அறிமுகம்!

|

ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ஒப்போ பேட் ஏர் (Oppo Tab Air) இன்று (அதாவது ஜூலை 18) இந்தியாவில் அறிமுகமானது. நினைவூட்டும் வண்ணம், இது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது; தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது.

இந்த ஒப்போ டேப்லெட் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ், என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது எப்போது முதல் வாங்க கிடைக்கும்? என்கிற கேளிவிகளுக்காக விடைகள் இதோ:

'லைட்' மற்றும் 'ஸ்லிம்'!

'லைட்' மற்றும் 'ஸ்லிம்'!

மெட்டல் பாடியுடன் வரும் Oppo Pad Air ஆனது அளவீட்டில் வெறும் 6.94 மிமீ (தடிமன்) மட்டுமே உள்ளது. எனவே தான் ஒப்போ நிறுவனம்,10-இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் மிகவும் 'லைட்' ஆன மற்றும் மெல்லிய டேப்லெட்களில் இதுவும் ஒன்று என்று "தில்லாக" கூறி உள்ளது!

பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!

என்ன டிஸ்பிளே, ப்ராசஸர் & ஓஎஸ்?

என்ன டிஸ்பிளே, ப்ராசஸர் & ஓஎஸ்?

Oppo Pad Air ஆனது 2000 x 1200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 10.36-இன்ச் அளவிலான 2கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் இந்த முதல் டேப்லெட் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த லேயர் கலர்ஓஎஸ் 12 கொண்டு இயங்குகிறது.

கேமராக்கள் எப்படி? என்ன பேட்டரி?

கேமராக்கள் எப்படி? என்ன பேட்டரி?

கேமராக்களை பொறுத்தவரை, Oppo Pad Air ஆனது எஃப்/2.0 லென்ஸ் உடனான சிங்கிள் 8MP ரியர் கேமராவை பேக் செய்கிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 5MP செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

டால்பி அட்மோஸ் ஆதரவுடனான குவாட் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த ஒப்போ டேப்லெட் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 7100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Free மொபைலுடன் தொடங்கிய Samsung ஆபர்; ஆகஸ்ட் 21 வரை நிதானமாக நடக்கும்!Free மொபைலுடன் தொடங்கிய Samsung ஆபர்; ஆகஸ்ட் 21 வரை நிதானமாக நடக்கும்!

என்னென்ன ஸ்டோரேஜ்களின் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

என்னென்ன ஸ்டோரேஜ்களின் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

இந்தியாவில் ஒப்போ பேட் ஏர் டேப்லெட் ஆனது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என்கிற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 64ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.16,999 க்கும், 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கும்.

விற்பனையை பொறுத்தவரை, இது வருகிற ஜூலை 23 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலஸ் மற்றும் மேக்னட்டிக் கீபோர்ட் பற்றி?

ஸ்டைலஸ் மற்றும் மேக்னட்டிக் கீபோர்ட் பற்றி?

ஒப்போ பேட் ஏர் டேப்லெட் ஆனது ஸ்டைலஸ் சப்போர்ட் உடன் சேர்த்து மேக்னட் கீபோர்ட்டிற்கான ஆதரவையும் வழங்கும்.

ஒப்போ பேட் ஏர்-க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்டைலஸ் ஆனது எடையில் வெறும் 18 கிராம் மட்டுமே உள்ளது மற்றும் 650mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மேலும் இந்த ஸ்டைலஸ் 4096-லெவல் பிரெஷர் சென்சிட்டிவிட்டிக்கான ஆதரவுடனும் வருகிறது.

மறுகையில் உள்ள ஒப்போ டேப்லெட்டிற்கான மேக்னட்டிக் கீபோர்ட் ஆனது ப்ளூடூத் 5.0 உடன் வருகிறது. ஒப்போ நிறுவனத்தின் இந்த 2 அக்ஸசெரீஸ்களும், இந்தியாவில் தனித்தனியாக விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஸ்டைலஸ் மற்றும் மேக்னட்டிக் கீபோர்ட்டின் இந்திய விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Photo Courtesy: Oppo

Best Mobiles in India

English summary
Oppo First Tablet Launched in India Check Oppo Pad Air Full Specifications Sale Date Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X