Home
Gadgets

சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 53 மணி நேர பேக்கப்.. ஹெல்த் டிராக்கிங்.. டூயல் டிரைவர்கள்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மியூசிக் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் வைக்கும்படியான பீச்சர்களுடன் ஓப்போ எக்னோ எக்ஸ்4 (OPPO Enco X4) இந்தியாவில் களமிறங்கி இருக்கிறது. இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் மாடலாக இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், இதில் ஹெல்த் டிராக்கிங் வருகிறது. இதன் மூலம் கழுத்தின் ஆங்கிள்கள் கண்காணிக்கப்படும். தலைக்கு பாதுகாப்பு மற்றும் சிரமத்தை தரும் ஆங்கிள்கள் டிடெக்ட் செய்யப்பட்டு, அலர்ட் கொடுக்கப்படும். இதற்காக போஸ்ச்சர் டிடெக்சன் சென்சார் (Posture-detection Sensor) கிடைக்கிறது.

சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 53 மணி நேர பேக்கப்.. எந்த மாடல்?

இதுபோக டால்பி பவர்டு கிளியர் ஆடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அதாவது, யூடியூப், வீடியோ கிராபி கிரியேட்டர்கள் இதில் இருத்தே ஆடியோவை ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். பிரீமியம் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும், ஏஐ லைவ் டிரான்ஸ்லேஷன் (AI Live Translation) இதில் கிடைக்கிறது. 30 மொழிகளில் இன்டிகிரேஷன் கொடுக்கிறது.

ஓப்போ எக்னோ எக்ஸ்4 அம்சங்கள் (OPPO Enco X4 Specifications): 11 எம்எம் டைனாமிக் பேஸ் டிரைவர்கள் மட்டுமல்லாமல், 6 எம்எம் ட்வீடர்களை இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 மாடல் கொடுக்கிறது. ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 10 மீட்டர்கள் வரையில் ரேஞ்ச் கிடைக்கும்.

ஆடியோ கோடெக்குகளை பார்க்கையில், ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC), எல்எச்டிசி (LHDC) மற்றும் எல்சி3 (LC3) கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 இருக்கிறது. 37dBFS மைக்ரோசென்டிவிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இயர்பட்களில் தலா 65mAh பேட்டரி கிடைக்கிறது.

மேலும், சார்ஜிங் கேஸில் 576mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 13 மணி நேரங்களுக்கு இயர்பட்களில் பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸில் 53 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஏஎன்சி (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்) ஆன் மற்றும் ஆப் ஆகியவற்றுக்கு ஏற்ப பேக்கப்பில் மாற்றம் இருக்கும்.

பிரீமியம் மாடலாக இருப்பதால், டைப்-சி (Type-C) சார்ஜிங் மட்டுமல்ல்மல், வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) கிடைக்கிறது. பட்களை ஃபுல் சார்ஜ் செய்ய 55 நிமிடங்கள் தேவைப்படும். சார்ஜிங் கேஸை ஃபுல் சார்ஜ் 65 நிமிடங்கள் தேவைப்படும். வயர்லெஸ் சார்ஜிங் செய்ய 2.5 மணி நேரங்களாகும். IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

5.6 கிராம் எடையில் ஒவ்வொரு பட்டும் இருக்கிறது. சார்ஜிங் கேஸ் 41.8 கிராம் எடை உள்ளது. ஆகவே, மொத்தமாக 50.9 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சப்போர்ட் கிடைக்கிறது. கிளாசியர் ஒயிட் (Glacier White) மற்றும் அரோரா வயலெட் (Aurora Violet) ஆகிய கலர்களில் இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பிரீமியம் மாடலாக இருப்பதால், ரூ. 19,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும், ரூ.1,000 லிமிடெட் ப்ரீயட் ஆஃபர் மற்றும் 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் கிடைக்கிறது. வருகிற அக்டோபர் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Enco X4 With Health Tracking AI Live Translation Available From October 29 in India Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X