சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 53 மணி நேர பிளேபேக்.. வயர்லெஸ் சார்ஜிங்.. ஏஎன்சி ஆடியோ.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் பிரீமியம் மாடலான ஓப்போ எக்னோ எக்ஸ்4 (OPPO Enco X4) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 53 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கும் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங், டைன்ஆடியோ டியூனிங் உள்ளிட்ட பீச்சர்களுடன் பட்டையை கிளப்புகிறது. இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
சீன மார்கெட்டில் இப்போது வெளியாகி இருக்கிறது. 4ஆவது ஜெனரேஷன் டைன்ஆடியோ டியூனிங் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, டூயல் டிரைவர்களில் கிடைக்கும் ஆடியோ அவுட்புட் பிரீமியமாக இருக்கும். டைன்ஆடியோ ஒரிஜினல் சவுண்ட், டைன்ஆடியோ ஹை-ரெசொலூஷன், ப்யூவ் வோகல், சர்ஜிங் பேஸ் உள்ளிட்ட டியூனிங் மோட்கள் உள்ளன.

முந்தைய மாடல்களைவிட 800 சதவீத ஹார்ட்வேர் பர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல நாய்ஸ் கேன்சலேஷனில் 200 சதவீதம், வோக்கல் நாய்ஸ் கேன்சலேஷனில் 250 சதவீத பர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அடாப்டிவ் மோட் (Adaptive Mode) வழியாக நாய்ஸ்களை மட்டும் நீக்கி, தேவையான ஆடியோவை கிரிஸ்டல் கிளியராக கொடுக்கிறது.
ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI translation) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 கிடைக்க இருக்கிறது. 20 மொழிகளுக்கும் மேல் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். ஆனால், கிளவுட் பேஸ்டு ஸ்டோரேஜ் கொடுக்கப்படுவதால், 5000 நிமிடங்களுக்கு மாதாந்திர லிமிட் இருக்கிறது. டூயல் இயர்பட் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.
ஓப்போ எக்னோ எக்ஸ்4 அம்சங்கள் (OPPO Enco X4 Specifications): 11 எம்எம் டைனாமிக் பேஸ் டிரைவர்கள் (Dynamic Bass Drivers) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 எம்எம் ட்வீடர் கிடைக்கிறது. ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 24 பிட் லாஸ்-லெஸ் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கனெக்டிவிட்டி உள்ளது.
10 மீட்டர்கள் வரையில் கனெக்டிவிட்டி ரேஞ்ச் கொடுக்கும். இதில் ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC), எல்எச்டிசி (LHDC) மற்றும் எல்சி3 (LC3) கோடெக் சப்போர்ட் கிடைக்கிறது. இயர்பட்களில் தலா 65mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 மாடலின் சார்ஜிங் கேஸில் 576mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
பிரீமியம் மாடலாக இருப்பதால், வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) கிடைப்பதால், பிளேபேக்கில் மாற்றங்கள் இருக்கின்றன. ஆகவே, ஏஎன்சி ஆப் செய்யப்பட்டால், 53 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. ஏஎன்சி ஆன் செய்யப்பட்டால், 26 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும்.
மேலும், ஏஎன்சி மற்றும் எல்எச்டிசி கோடெக் ஆடியோவை கேட்டால், 22 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 4.5 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கும். ஹேமெலடி ஆப் (HeyMelody App) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்4 மாடலின் விலை ரூ.17,123 ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. சாப்ட் ஒயிட் (Soft White), பிங்க் கோல்டு (Pink Gold) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Gray) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications
