இது சுத்தி சுத்தி அடிக்கும்.. சிங்கிள் சார்ஜில் 45 மணி நேர பிளேபேக்.. ANC ஆடியோ.. டூயல் டிரைவர்.. எந்த மாடல்?
ஆடியோ பிரியர்களை தட்டித்துக்கும்படியான பீச்சர்களுடன் ஓப்போ நிறுவனத்தின் எக்னோ எக்ஸ்3எஸ் (OPPO Enco X3s) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 45 மணி நேர பிளே பேக் மட்டுமல்லாமல், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டூயல் டைனாமிக் டிரைவர்கள், டைன்ஆடியோ டியூனிங், IP55 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஏஐ டிரான்ஸ்லேட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்3எஸ் இயர்பட்ஸ் மாடலின் முழு பீச்சர்கள் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஆகிய மாடல்கள் களமிறங்கி இருக்கிறது. இந்த மாடல்களுடன் ஓப்போ எக்னோ எக்ஸ்3எஸ் இயர்பட்ஸ் மாடலானது பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது. குளோபல் மார்கெட்டுக்கு பிறகு இந்திய உள்பட மற்ற மார்கெட்களில் கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ஓப்போ எக்னோ எக்ஸ்3எஸ் அம்சங்கள் (OPPO Enco X3s Specifications): இந்த மாடலில் 11எம்எம் மற்றும் 6எம்எம் கொண்ட டூயல் டைனாமிக் டிரைவர்கள் (Dual Dynamic Drivers) கிடைக்கின்றன. இதில் டைன்ஆடியோ (Dynaudio) டியூனிங் பிரத்யேகமாக கிடைக்கிறது. இந்த டியூனிங் மூலம் நேச்சுரல் ஆடியோ குவாலிட்டி எதிர்பார்க்கலாம். எல்எச்டிசி 5.0 (LHDC 5.0) கொண்ட ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது.
ஸ்டீரியோ ஆடியோவை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ப ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கிடைக்கிறது. இதில் ஓம்னிடைரெக்ஸ்ஷனல் இம்மெர்ஷிவ் ஆடியோ (Omnidirectional Immersive Audio) சப்போர்ட் உள்ளது. மேலும், பர்சனலைஸ்டு ஆடியோ டியூனிங் கொடுக்க கோல்டன் சவுண்ட் 2.0 (Golden Sound 2.0) கொடுக்கப்படுகிறது. பிரீமியமான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்3எஸ் மாடலில் 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. இதில் 5500Hz அல்ட்ரா-வைடு ஃப்ரிகொன்சி ரேஞ்ச் கிடைக்கும். ஆகவே, அவுட்டோரில் கிரிஸ்டல் கிளியர் ஆடியோவை எதிர்பார்க்கலாம். அதேபோல ரியல்-டைம் டைனாமிக் ஏஎன்சி (Real-time Dynamic ANC) அனுபவம் கிடைக்கும். இதற்காக அடாப்டிவ் மோட் (Adaptive Mode) கிடைக்கிறது.
இதுபோக வாய்ஸ் கால்களுக்காக ஏஐ என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) சப்போர்ட் கொண்ட டிரிபிள் மைக்குகள் கிடைக்கின்றன. இதில் ஏஐ கிளியர் கால் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்கள் அனுபவமும் இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்3எஸ் மாடலில் எதிர்பார்க்கலாம். இதில் ஏஐ டிரான்ஸ்லேட் (AI Translate) சப்போர்ட் கிடைக்கிறது.
ஆகவே, ரியல் டைமில் வேறு மொழியில் இருந்து டிரான்ஸ்லேட் செய்த ஆடியோவை கேட்டு கொள்ளலாம். ஆனால், லைன் டிரான்ஸ்லேட் சப்போர்ட் கொண்ட ஓப்போ ஸ்மார்ட்போன் இதற்கு வேண்டும். இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்3எஸ் மாடலில் டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, வால்யூம் மற்றும் கால் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். மற்ற கன்ட்ரோல்களுக்கு ஹோமெலோடி (HeyMelody) ஆப் சப்போர்ட் கிடைக்கிறது.
ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதில் டூயல் கனெக்டிவிட்டி கிடைக்கும். ஆகவே, ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். மொத்தமாக 45 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. ஏஎன்சி ஆன் செய்திருந்தால், 24 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கிறது. பட்களில் 62mAh பேட்டரி, சார்ஜிங் கேஸில் 530mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த சார்ஜிங் கேஸ் 49 கிராம் எடை வருகிறது. அதேபோல இயர்பட் 4.7 கிராம் எடை கொடுக்கிறது. IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ எக்னோ எக்ஸ்3எஸ் மாடலின் விலை ரூ.13,254ஆக இருக்கிறது. இது ஐரோப்பிய மார்கெட் விலையாகும். இந்திய உள்பட மற்ற மார்கெட்களில் விலை மாறுபடலாம். ஓரிரு மாதங்களில் வெளியீடு இருக்கும்.


Click it and Unblock the Notifications








