Home
Gadgets

செப்.4-க்குள்ள வாங்கி போடுங்க.. அப்புறம் ஆஃபர் போயிரும்.. 54 மணி நேரங்களுக்கு பிளேபேக்.. டீப் பேஸ் ஆடியோ!

பிளிப்கார்ட் தளத்தில் அறிமுக சலுகையாக நேரடி விலை குறைப்பு போக ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ (OPPO Enco Buds3 Pro) மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒரே சார்ஜில் 54 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுப்பது மட்டுமல்லாமல், டீப் & பவர்புல் பேஸ் ஆடியோ, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் அறிமுக சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியமான ஆடியோ பீச்சர்களுடன் கடந்த மாதமே இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடல் வெளியாகிவிட்டது. ஆனால், விற்பனை மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது. இப்போது, அறிமுக சலுகையுடன் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. செப்டம்பர் 2ஆம் தேதி முதலே ஆஃபர் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 4ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கிறது.

செப்.4-க்குள்ள வாங்கி போடுங்க.. அப்புறம் ஆஃபர் போயிரும்.. எந்த மாடல்?

இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடலின் மார்கெட் விலை ரூ.1,799ஆக இருக்கிறது. இப்போது, அறிமுக சலுகையில் ரூ.200 விலை குறைப்பு போக ரூ.1,599 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த ரூ.200 விலை குறைப்பை பெறுவதற்கு பேங்க் கார்டுகள் தேவையில்லை. கிளாஸ் ஒயிட் (Glaze White) மற்றும் கிராஃபைட் கிரே (Graphite Grey) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

இந்த விலைக்கு பிரீமியம் லுக் கொடுக்கும்படி சார்ஜிங் கேஸ் மற்றும் பட்கள் கிடைக்கின்றன. டைட்டானியம் கோட்டெட் டைனாமிக் டிரைவர்கள் மற்றும் மேட் பினிஷிங் சார்ஜிங் கேஸ் கிடைக்கிறது. இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடலுக்கு IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கிடைக்கிறது.

ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ அம்சங்கள் (OPPO Enco Buds3 Pro Specifications): இந்த என்கோ பட்ஸ்3 ப்ரோவில் 12.4 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் (Dynamic Driver) கிடைக்கின்றன. இவை எக்ஸ்ட்ரா லார்ஜ் டிரைவர்களாக இருப்பதால், ஆடியோவில் டீப் மற்றும் பேஸ் அவுட்புட் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் சார்ஜிங் இன்டிகேட்டர் கிடைக்கிறது.

இந்த சார்ஜிங் கேஸ் மூலம் 54 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். அதேபோல 12 மணி நேரங்களுக்கு பட்களில் பிளேபேக் பெற்று கொள்ளலாம். இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடலின் சார்ஜிங் கேஸில் 560mAh பேட்டரி மற்றும் பட்களில் தலா 58mAh பேட்டரி கிடைக்கிறது. 10 நிமிட சார்ஜிங்கில் 4 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம்.

அதுவே பட்கள் மற்றும் சார்ஜிங் கேஸ் ஆகியவற்றுடன் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இரண்டிலும் சேர்த்து 8 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். எப்படி பார்த்தாலும், இது பிளேபேக்கில் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டியுடன் எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடெக் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.

மேலும், கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் மற்றும் ஒரோ நேரத்தில் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் கனெக்ட் செய்து கொள்ளும்படி டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி (Dual-Device Connectivity) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஆடியோ வீடியோ சின்க் கொடுக்க 47ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட் வருகிறது. இப்படி பல்வேறு பீச்சர்கள் உள்ளன.

Best Mobiles in India

English summary
OPPO Enco Buds3 Pro Limited Time Offer on Flipkart till September 4 Priced At Rs 1599
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X